Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை பீச் to செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ஏசி ரயில்கள் – விரைவில் அறிமுகம்!

சென்னை பீச் to செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ஏசி ரயில்கள் – விரைவில் அறிமுகம்!

சென்னை மக்களுக்கு உண்மையிலேயே உயிர்நாடியாக இருப்பது MRTS எனப்படும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தான். இந்த ரயிலில் ஏறிப் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இந்த ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரும் வாழ்க்கை தேடலுக்காக ஓடிக் கொண்டிருப்பதை நாம் உணரலாம். குறைந்தபட்சமாக ரூ.5 கொடுத்து நாம் டிக்கெட் வாங்கினாலே இந்த ரயிலில் பயணிக்கலாம். தற்போது சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பாதையில் புதிதாக ஏ.சி மின்சார ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது!

சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏசி ரயில்கள்

சென்னையில் ஏசி மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏசி ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

chennaisuburbanmrtstrains1

மலிவான கட்டணத்தில் விரைவான பயணம்

சென்னையின் மிக முக்கிய பொது போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை விளங்கி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளுக்குள் மலிவான விலையில் வேகமாக பயணம் செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது இந்த மின்சார ரயில் சேவை தான். புறநகர் பகுதி மக்கள் எளிதில் போக்குவரத்து பயணம் மேற்கொள்ள மின்சார ரயில்கள் பயனுள்ளதாக உள்ளன.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு பிடித்த ரயில் பயணம்

இந்த மின்சார ரயில் சேவை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள், வியாபாரிகள், முதியோர்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். பயணிகளுக்கு மேம்பட்ட பயணத்தை வழங்கும் பொருட்டு ரயில்வே இப்போது புதிதாக ஒரு முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் கனவுகளுடன், வெவ்வேறு வாழ்க்கை சூழலுடன் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்வதை பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.

MRTS trains soon to have air conditioned coaches

புறநகர் ரயில் சேவையில் ஏசி ரயில்கள் அறிமுகம்

இந்த வழித்தடத்தில் ஏசி லோக்கல் ரயில்களுக்கான தேவையை மதிப்பிடுவதற்கு மாநில அரசு ஒரு ஆய்வை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தாம்பரம் அல்லது ஆவடி ஈமு ஷெட்களில் ஏசி ஈமு ரேக் பராமரிப்புக்கான பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும், என்றனர். இதேபோன்ற ரேக்குகள் ஏற்கனவே மும்பையில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஏசி ரயிலில் நீங்கள் பயணிக்கலாம்

தலா 12 பெட்டிகள் கொண்ட இரண்டு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏசி மின்சார ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும். பின்னர் பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து படிப்படியாக இந்த ஏசி மின்சார ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

More News

    Read more about: chennai irctc news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+