Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு மே 2 முதல் MEMU ரயில் சேவை துவக்கம் – கிரிவல பக்தர்களே!

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு மே 2 முதல் MEMU ரயில் சேவை துவக்கம் – கிரிவல பக்தர்களே!

மாதந்திர பௌர்ணமி, சிவராத்திரி, கார்த்திகை தீபம் என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்! பக்த கோடிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் மெமு (MEMU) விரைவு உள்ளூர் சேவையை மே 2 முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் எந்தவித சிரமுமின்றி திருவண்ணாமலைக்கு பயணம் செய்யலாம்!

திருவண்ணாமலைக்கு புதிய ரயில் சேவை

1989 இல் நிறுவப்பட்டதிலிருந்து, அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேரடி தினசரி ரயில் இணைப்பு இல்லை. திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிப்பவர்கள் சென்னைக்கு செல்ல TNSTC பேருந்துகளை நம்பியுள்ளனர். புது தில்லி, மேற்கு வங்கம் மற்றும் பிற வடமாவட்டங்களுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் திண்டிவனம் அல்லது காட்பாடிக்குச் சென்று சென்னைக்கு இரயில் ஏறுகிறார்கள். திருவண்ணாமலைக்கு சரி வர ரயில்கள் இல்லை, ஆனால் இப்போது துவங்குகிறது!

chennaitotiruvannamalaimemutrainservices

பக்தர்கள் சிரமமின்றி பயணிக்கலாம்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் நலனுக்காகவே தென்னக ரயில்வே சென்னையிலிருந்து திருவண்ணமலைக்கு புதிய மெமு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதாந்திர கிரிவலம், சிவராத்திரி, மஹா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி வேளைகளில் பக்தர்கள் சிரமமின்றி திருவண்ணாமலைக்கு சென்று வரலாம்!

சென்னை to திருவண்ணாமலை ரயில் சேவை

அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மெமு உள்ளூர் இரவு 9.35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடைகிறது. மே 2ம் தேதி முதல் வேலூரில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மூன்றரை மணி நேரத்தில் சென்னை

இதேபோல், மே 3ம் தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 5.40 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும். இந்த ரயில் பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி சாலை, மடிமங்கலம் மற்றும் போளூர் ஆகிய ரயில் நிலையங்களில் இரு திசைகளிலும் நின்று செல்லும். வழக்கமான அட்டவணைப்படி வேலூரில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

chennaitotiruvannamalaimemutrainservices

மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும்

சில ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி-வேலூர் மெமுவை திருவண்ணாமலை வரை நீட்டிக்க திருச்சி கோட்டம் முன்மொழிந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக திட்டம் செயல்படுத்த முடியவில்லை. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாதா மாதம் பௌர்ணமி கிரிவலம் வரும் போது திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு ரயிலைத் திட்டமிடுகிறோம் என்றும் கூறினார்".

பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருவண்ணாமலை

அண்ணாமலையாரின் இருப்பிடமான திருவண்ணாமலையில், மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலத்தின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின் போது, மாநிலம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.

திருவண்ணாமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்

அண்ணாமலையார் கோயிலை தவிர திருவண்ணாமலையில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!

1. சாத்தனூர் அணை

2. ரமண ஆசிரமம்

3. விருபாக்ஷா குகைகள்

4. திருவாமலை

5. மாமர குகை

6. ஸ்கந்தாசிரமம்

7. சேஷாதிரி சுவாமிகள் ஆசிரமம்

8. செஞ்சி கோட்டை

9. யோகி ராம் ஆசிரமம்

10. படைவீடு

11. ஜாவது மலைகள்

More News

Read more about: tiruvannamalai chennai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+