Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து திருச்சி இனி வெறும் 4 மணி நேரம் தான் - வந்துவிட்டது புதிய எக்ஸ்பிரஸ்வே!

சென்னையிலிருந்து திருச்சி இனி வெறும் 4 மணி நேரம் தான் - வந்துவிட்டது புதிய எக்ஸ்பிரஸ்வே!

இனி சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மக்கள் மிகவும் விரைவாகவும, வசதியாகவும் செல்லலாம். தற்போதுள்ள 6 மணி நேரப் பயணத்திற்குப் பதிலாக மக்கள் இந்த இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே வெறும் 4 மணி நேரத்தில் பயணிக்க முடியும். இந்த இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை திறமையாக கையாளவும் நேரத்தை குறைக்கவும் 310 கிமீ நீளமுள்ள சென்னை to திருச்சி விரைவுச்சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது!

வட மாநிலங்களை விட பின் தங்குகிறதா தமிழகம்?

இந்தியாவின் மிக முக்கிய எக்ஸ்பிரஸ்வேக்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. அங்கு இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழகம் பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை, விவசாய நிலங்களில் சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு, மக்கள் போராட்டம் உள்ளிட்டவை காரணமாக உள்ளது.

கிடப்பில் போடப்பட்டுள்ள சேலம் எட்டு வழி சாலை

சென்னை சேலம் இடையே எட்டு வழி சாலைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரத் மாலா பரியோஜன இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ்வே வழித்தடத்தை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

nhaiplanschennaitrichyexpressway

விரைவில் தமிழகத்தில் புதிய எக்ஸ்பிரஸ்வே

உச்ச விடுமுறை மற்றும் சுற்றுலா சீசனில் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இரு நகரங்களுக்கு இடையே ஒரு விரைவுச்சாலை அமைத்தால் பொதுமக்கள் எந்த சிரமுமின்றி விரைவாக பயணம் செய்யலாம் என NHAI முடிவு செய்து இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு கிரீன் சிக்னல் பெற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) பரிசீலித்து வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், புறவழிச்சாலைகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் 6747 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் உட்பட புதிய சாலை திட்டங்களின் அறிவிப்பை பல இடங்களில் வெளியிட்டது. இந்த திட்டங்களின் இரண்டாம் கட்டத்தின் போது, விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைகளை உள்ளடக்கிய புதிய திட்டங்களால் தமிழகமும் பயனடையும் என்று தெரிவித்துள்ளது என்று NHAI தெரிவித்துள்ளது.

nhaiplanschennaitrichyexpressway

சென்னை to திருச்சி மட்டுமல்ல, இந்த நகரங்களுக்கும் செல்லலாம்

தமிழ்நாட்டின் போக்குவரத்து வலையமைப்பை மேலும் மாற்றவும், பயண வசதியை மேம்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 160 கி.மீ தூரம் வரையிலான பிள்ளையார்பட்டி தூத்துக்குடி நெடுஞ்சாலையை அமைக்க முன்மொழிந்துள்ளனர். இந்த நெடுஞ்சாலை பல மாவட்டங்களை இணைக்கும் அதே போல் சென்னை திருச்சி விரைவுச்சாலையையும் இணைக்கும். இந்த இரண்டு நெடுஞ்சாலைகளும் சுமார் 470 கிமீ மாநிலத் திட்ட சாலை மற்றும் வலையமைப்பைச் சேர்க்கும்.

சென்னை திருச்சி விரைவுச்சாலை பல்வேறு நெடுஞ்சாலை வழித்தடங்கள் வழியாக கீழே உள்ள நகரங்களுடன் இணைக்கப்படும்

· சென்னை

· திருச்சி

· தஞ்சாவூர்

· சிவகங்கை

· தூத்துக்குடி

தமிழகத்தின் பொருளாதாரம் வலுபெறும்

முன்மொழியப்பட்ட சென்னை திருச்சி விரைவுச்சாலையானது மாநிலத்தில் அதிக போக்குவரத்தை கையாளும், நெரிசலை குறைக்க தேவையான உள்கட்டமைப்பு ஆகும். இணைக்கப்பட்ட நகரங்களுக்கிடையிலான பிராந்திய இணைப்பை எளிதாக்குவதைத் தவிர, நெடுஞ்சாலையானது முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் மாநிலத்தின் பொருளாதார நிலையைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

    Read more about: travel tamil nadu trichy
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+