Search
  • Follow NativePlanet
Share
» »உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் லண்டன் மற்றும் பாரிஸை முந்திய நம் பெங்களூர்!

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் லண்டன் மற்றும் பாரிஸை முந்திய நம் பெங்களூர்!

தொழில்துறை, கல்வி, கட்டமைப்பு, மருத்துவம், ராணுவம், விஞ்ஞானம், அறிவியல் என அனைத்து துறைகளிலும் இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு 2016 ஆம் ஆண்டு முதல் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது. ஐரோப்பிய நகரங்களான லண்டன், முனிச், பெர்லின் மற்றும் பாரிஸ் ஆகிய பெரும் நகரங்களையும் நம் பெங்களூர் முந்திவிட்டது என பொருளாதார நிறுவனமான Oxford Economics தெரிவித்துள்ளது!

ஆசியா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் முதலிடம் பிடித்த நம் பெங்களூர்

ஆசியா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் முதலிடம் பிடித்த நம் பெங்களூர்

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று செல்லமாக அழைக்கப்படும் பெங்களூர் நகரம் 2023 ஆம் ஆண்டில் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளரும் நகரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஹைதராபாத் இரண்டாம் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Oxford Economics இன் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சியின் அடிப்படையில் ஆசிய பசிபிக் மற்றும் இந்திய நகரங்களை விட தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூரு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் ஹைதராபாத்

இரண்டாம் இடத்தில் ஹைதராபாத்

Oxford Economics ஆய்வின்படி, 2023-ல் பெங்களூரு ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மட்டுமல்ல, ஹைதராபாத் கூட 2023-ல் இதேபோன்ற வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தென்னிந்திய நகரங்களும் உற்பத்தித் துறையில் பல முதலீடுகளை ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல 2023 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் ஆசிய பசிபிக் (APAC) முக்கிய நகரங்களான பாங்காக், ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங் மற்றும் டோக்கியோ போன்ற நகரங்களுக்கு பெங்களூர் கடும் போட்டியை அளிக்க வாய்ப்புள்ளது.

மும்பைக்கு 21வது இடம்

மும்பைக்கு 21வது இடம்

பெங்களூரு மற்றும் லண்டனுக்குப் பின்னால், வேகமாக வளர்ந்து வரும் மற்ற தொழில்நுட்ப மையங்களில் இரண்டு ஜெர்மன் நகரங்களான மியூனிக் மற்றும் பெர்லின் மற்றும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் ஆகியவை இடம் பிடித்துள்ளன. மும்பை உலக அளவில் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ளது.

வளர்ச்சியில் லண்டனை முந்திய பெங்களூர்

வளர்ச்சியில் லண்டனை முந்திய பெங்களூர்

Dealroom.co தரவுகளை லண்டனின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான லண்டன் & பார்ட்னர்ஸ் ஆய்வு செய்தனர். அதில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முதலீடு 5.4 மடங்கு அதிகரித்து 2016ல் 1.3 பில்லியன் டாலரிலிருந்து 2020ல் 7.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் மும்பையில் முதலீடு 1.7 மடங்கு அதிகரிதுள்ளது, $0.7 பில்லியனில் இருந்து $1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், லண்டன் 2016 மற்றும் 2020 க்கு இடையில் மூன்று மடங்கு வளர்ச்சியைப் பதிவுசெய்தது, இது $3.5 பில்லியனில் இருந்து $10.5 பில்லியனாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி விகிதம் என்று பார்த்தால் லண்டனை விட பெங்களூர் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுடன் லண்டன் வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவைக் கொண்டுள்ளது மற்றும் இன்றைய புள்ளிவிவரங்கள் தொழில்நுட்பத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே எதிர்கால கூட்டாண்மைக்கான வாய்ப்புகளைக் காட்டுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய வல்லுனர்கள் மகிழ்ச்சி

இந்திய வல்லுனர்கள் மகிழ்ச்சி

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையமாக பெங்களூரு உருவானதன் ஒரு பகுதியாக இருப்பது உற்சாகமாக உள்ளது. 2020 இன் அனைத்து சவால்களையும் மீறி, லண்டனின் தொழில்நுட்பத் துறை எவ்வளவு நெகிழ்ச்சியுடன் உள்ளது என்பதைப் பார்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கிறது என்று இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெங்களூருவில் பார்க்க்க வேண்டிய இடங்கள்

பெங்களூருவில் பார்க்க்க வேண்டிய இடங்கள்

பெங்களூருவில் இல்லாத கேளிக்கைகளே இல்லை என்று சொல்லலாம். பிசியான நகர வாழ்க்கை, பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், கடல் போல் இருக்கும் மால்கள், துடிப்பான பப்கள் மற்றும் கஃபேக்கள், வண்ணமயமான ஷாப்பிங், நகரத்திற்கு அருகே மலை வாசஸ்தலங்கள், கேளிக்கை பூங்காக்கள் என அனைத்துமே உள்ளன. நீங்கள் இந்த பரபரப்பான நகரத்திற்கு சென்றால் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் கீழே.

o லால் பாக் தாவரவியல் பூங்கா

o நந்தி மலை

o கப்பன் பூங்கா

o நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்

o அல்சூர் ஏரி

o அரசு அருங்காட்சியகம்

o பெங்களூர் அரண்மனை

o திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை

o இஸ்கான் கோயில், பெங்களூர்

o புதுமையான திரைப்பட நகரம்

o ஜவஹர்லால் நேரு கோளரங்கம்

o கிரிப்ஸ் கோ கார்டிங்

o விதான சவுதா

o கிருஷ்ண ராஜன் சந்தை

o தேவனஹள்ளி கோட்டை

o ஜனபத லோகம்

o சாங்கி தொட்டி

o வெங்கடப்பா கலைக்கூடம்

o அட்டாரா கச்சேரி

o வொண்டர் லா வாட்டர் பார்க்

நீங்கள் அடுத்த முறை பெங்களூரு செல்லும் போது இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு வாருங்களேன். முக்கியமாக பெங்களூருவில் ஷாப்பிங் செய்ய மறக்காதீர்கள். அட்டகாசமாக இருக்கும்!

More News

    Read more about: bangalore
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+