Search
  • Follow NativePlanet
Share
» »இரண்டு நாள் பிரதமர் தியானம் ?

இரண்டு நாள் பிரதமர் தியானம் ?

'லோக்சபா' தேர்தல் என்ற ஜுரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஜூன் 1ம் தேதியுடன் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

நாடு முழுவதும் நடந்து முடிந்த லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் எண்ணப்படவுள்ளன. தேர்தல் முடிவை அடுத்து, பாராளுமன்ற கட்டடத்தின் ஆளுமை யார் என்பது தெரிந்துவிடும்

இன்று மத்தியில் ஆளும் பா.ஜ., தென் மாநிலங்களில் பெரியளவில் கோலோச்ச முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அதை முறியடிக்கும் முயற்சியில், கடந்த சில ஆண்டுகளாக களப்பணியை செய்து வருகிறது.

இந்திய நாட்டின் பிம்பம் மட்டுமின்றி, பா.ஜ.,வின் பிம்பமான பிரதமர் நரேந்திர மோடி, தென் மாநிலங்களில் தொடர்ந்து தன் இருப்பை காட்டி வருகிறார்.

அந்த வரிசையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு அன்று நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு, பிரதமர் மோடி வருகை தருகிறார்.

primeministernarendramodiisgoingtomeditate1

இரண்டு நாள் பயணம்

பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (மே 30) மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 4.35 மணி அளவில் வருகிறார். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மாலை 5.30 மணி அளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார்.

அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியானக் கூடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார்.

நாளை மாலையில் இருந்து ஜூன் 1-ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்கிறார். மாலை 3.30 மணிஅளவில் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்

என்ன ஸ்பெஷல்

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கிறார்.

அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு, இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது.

இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகில் உள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமரின் வருகையால், நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறக்காதீங்க... இந்த நாட்களில் நீங்க போக முடியாது.

படகில் பயணம்

கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும், பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.

இதற்கு முன் எங்கு தியானம் ?

லோக்சபா தேர்தல் முடிவடையும் நேரங்களில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளார்.

கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் முடிவடைந்தபோதும் அவர் தியானம் மேற்கொண்டார். 2014-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் என்ற

என்ற இடத்தில் தியானம் செய்த பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு இமயமலையில் கேதார்நாத் குகைக்கு சென்று காவி உடையில் தியானம் மேற்கொண்டார்.

இதன் பின் கேதார்நாத குகை பிரதமர் மோடி தியானம் செய்த குகை என்கிற பெயருடன் மேலும் பிரபலம் அடைந்தது. அந்த வரிசையில், லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த தியானம் அரசியல் களத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+