Search
  • Follow NativePlanet
Share
» »இரவில் தாஜ்மஹாலை கண்டு களித்திட இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இரவில் தாஜ்மஹாலை கண்டு களித்திட இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

தலைப்பை படித்த உடனே சற்று சிலிர்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால் அது உண்மைதான். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் பெருமைமிகு சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலை பகலில் பார்வையிடுவது பற்றி நாம் அறிவோம். ஆனால் இரவில் கண்டு களிக்கவும் நமக்கு அனுமதி உண்டு என நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

ஆனால் இந்த மாதத்தில் நீங்கள் தாஜ்மஹாலுக்கு சென்றால் இரவில் நிலவொளியில் நீங்கள் அதன் அழகை ரசித்திடலாம். அதனைப் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!

visitingtajmahalinnight11

நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலின் அழகை இந்த மாதத்தில் நான்கு முறை ரசிக்கலாம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அக்டோபரில் நான்கு இரவுகளுக்கு 'ஷரத் பூர்ணிமா'வின் போது வெள்ளை பளிங்கு அழகை நாம் கண்டு களிக்கலாம்'.

ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதமும் சரத் பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. அழகான நிகழ்வு சாம்கி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில், பல்வேறு கோணங்களில் நிலவொளி அழகிய தாஜ்மஹாலின் மேல் பட்டு பிரதிபலிப்பதை பார்த்து நாம் திகைப்படையாமல் இருக்க முடியாது.

visitingtajmahalinnight21-1665231274.jpg -Properties

இந்த முறை இந்த சரத் பூர்ணிமா அக்டோபர் 7, 8, 9, 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று தாஜ்மஹாலை நாம் காண இயலாது. அதை தவிர்த்து மிச்ச நான்கு நாட்களில் நாம் இரவில் தாஜ்மஹாலின் அழகை இரவில் கண்டு ரசித்திடலாம்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலின் நிலவொளி காட்சியை ரூ.750 சிறப்பு கட்டணத்தில் கண்டு மகிழலாம், இந்திய சுற்றுலாப்பயணிகள் ரூ.510 க்கு 30 நிமிடங்களுக்கு கண்டு களிக்க முடியும். மேலும் டிக்கெட்டுகளைப் பொறுத்தவரை, ஆர்வமுள்ளவர்கள் ASI அலுவலகத்தில் உள்ள கவுண்டரில் இருந்து இரவு பார்க்கும் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக தங்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

visitingtajmahalinnight31

இது குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், "வெள்ளிக்கிழமையன்று தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளதால், சனிக்கிழமை முதல் செவ்வாய் வரை நான்கு நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நினைவுச்சின்னத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறினார். இரவு 8:30 மணி முதல் 12:30 மணி வரை சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலைப் பார்வையிடலாம்.

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த அழகை அனுபவிக்க தாஜ்மஹாலில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஒரு இரவிற்கு வெறும் 400 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஆகவே நீங்கள் முந்திக் கொள்வது மிகவும் அவசியம்.

More News

    Read more about: taj mahal agra uttar pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+