Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய ரயில்வேயால் திறக்கப்பட்ட முதல் திருநங்கைகளின் தேநீர் கடை – வருங்காலத்தில் நிறைய கடைகளை எதிர்பார்க்கலாம்

இந்திய ரயில்வேயால் திறக்கப்பட்ட முதல் திருநங்கைகளின் தேநீர் கடை – வருங்காலத்தில் நிறைய கடைகளை எதிர்பார்க்கலாம்

திருநங்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) மூலம் அஸ்ஸாமின் கவுஹாத்தி ரயில் நிலையத்தில் முதன்முறையாக சிறப்பு டீ ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு மத்திய அரசு நிறுவனத்திலும் இதுபோன்ற முதல் முயற்சி இதுவே ஆகும், இது பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என அந்தப் பகுதி மக்களும், திருநங்கைகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எதிர் காலத்தில் இந்தியாவின் பல ரயில் நிலையங்களில் இது போன்ற டீ ஸ்டால்களை நாம் விரைவில் காணலாம்!

transteastallcover

அஸ்ஸாமின் கவுஹாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகளின் டீ ஸ்டால்

அஸ்ஸாமில் உள்ள கவுஹாத்தி ரயில் நிலையம் இப்போது இந்தியாவின் முதல் திருநங்கைகளின் தேநீர் கடையின் தாயகமாக உள்ளது. டீ ஸ்டால் முழுவதுமாக திருநங்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இது அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சமூகத்தைப் பற்றிய முன்கூட்டிய கருத்துக்கள் மற்றும் அவர்கள் மீதான இழிவுபடுத்தும் எண்ணங்களை மாற்றுவதற்கு ஒரு அற்புதமான வழியாகும்.

நீண்ட நாட்களாக முயற்சி

கவுஹாத்தி ரயில் நிலையத்தில் 'டிரான்ஸ் டீ ஸ்டால்' அமைக்க வடகிழக்கு எல்லை ரயில்வே நீண்ட நாட்களாக முன்முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் இதுபோன்ற தேநீர் கடை திறக்கப்படுவது இதுவே முதல்முறை. அனைத்து அஸ்ஸாம் திருநங்கைகள் சங்கம் மற்றும் உயர் ரயில்வே அதிகாரிகளின் ஆதரவு மற்றும் தீவிர ஒத்துழைப்பால் இது இப்போது சாத்தியமாகி உள்ளது.

transteastall

அமர்க்களமாக தொடக்க விழா

கவுஹாத்தி நகரில் உள்ள கம்ரூப் பகுதியின் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் டிரான்ஸ் டீ ஸ்டால் தொடக்க விழா நடந்தது. தொடக்க விழாவிற்கு பிறகு அளித்த பேட்டியில், NF ரயில்வேயின் CPRO, சப்யசாச்சி திருநங்கைகளின் டீ ஸ்டால் பற்றி நெகிழ்வுடன் பேசினார். வடகிழக்கு எல்லை ரயில்வேயின் பொது மேலாளர் அன்ஷுல் குப்தா டிரான்ஸ் டீ ஸ்டாலை திறந்து வைத்தார்.

transteastall

பிளாட்ஃபார்ம் எண் 1 இல் உள்ள டீ ஸ்டால்

இந்த தேநீர் கடை கவுஹத்தி ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் எண் 1 இல் அமைந்துள்ளது. தொடக்க நிகழ்ச்சியில், அசாமின் திருநங்கைகள் நல வாரியத்தின் இணை துணைத் தலைவர் ஸ்வாதி பிதான் பருவாவும் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர் "இந்திய ரயில்வேயால் திறக்கப்பட்ட முதல் திருநங்கை தேநீர் கடை இதுவாகும். கவுகாத்தி ரயில் நிலையம் பிளாட்ஃபார்ம் 1ல் அமைந்துள்ள முழு ஸ்டாலும் திருநங்கைகளால் மட்டுமே நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படும். அரசாங்கத்தின் 'சப்கா சத் சப்கா விகாஸ்' என்பதற்கு இந்த ஸ்டால் சாட்சி. இந்த டீ ஸ்டால் உண்மையிலேயே சமூகத்தில் எங்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தூணாக அமைந்துள்ளது, இதை நாங்கள் எந்த குறையுமின்றி அசத்தலாக எடுத்து நடத்துவோம்" என்று கூறினார்.

transteastall

டீ ஸ்டாலில் டீ மட்டும் இல்லை, இந்த ஐடம்களும் விற்கப்படுமாம்

வெள்ளை எழுத்துருவில் 'டிரான்ஸ் டீ ஸ்டால்' என்று எழுதப்பட்ட இளஞ்சிவப்பு நிற தேநீர் கடையை நீங்கள் கவுஹாத்தி ரயில் நிலையத்தில் காணலாம். பயணிகள் கோகோ கோலா, நெஸ்கஃபே குளிர் காபி, மேகி கப் நூடுல்ஸ், சோகோ பை, பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் கிட்கேட் சாக்லேட்டுகள் போன்ற சிற்றுண்டிகளையும் அங்கே வாங்கிக் கொள்ளலாம். எனவே, சூடான கப் சாய் தவிர, நீங்கள் பயணத்தின்போது தின்பண்டங்கள் மற்றும் கோடைகால குளிர்விப்பான்களையும் இங்கே இருந்து வாங்கி ருசிக்கலாம்!

transteastall

இணையத்தை கலக்கிய புகைப்படங்கள்

வடகிழக்கு எல்லை ரயில்வே புதிதாக திறக்கப்பட்ட திருநங்கைகளின் தேநீர் கடையின் புகைப்படங்களை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்டது. புகைப்படங்கள் வெளியான தருணத்தில் இருந்து வாழ்த்து மழையில் அது நனைந்தது என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்களும், அதிகாரிகளும், பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இதே போன்ற டீ ஸ்டால்களை நாம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நாம் எதிர்பார்க்கலாம்! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள் எண்டு கமென்ட்டில் தெரிவியுங்கள்!

More News

    Read more about: guwahati assam
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+