சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன், ராம்சார் மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐந்து புதிய இந்திய தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டிலும், ஒன்று மத்திய பிரதேசத்திலும் மற்றும் ஒன்று மிசோரத்திலும் அமைந்துள்ளன.

ராம்சர் அங்கீகாரம் என்றால் என்ன?
இந்த அங்கீகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள, ராம்சார் தளம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1971 இல் யுனெஸ்கோவால் 'ஈரநிலங்கள் மீதான மாநாடு' என்று பல்வேறு நாட்டு அரசுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப்பட்டது. ராம்சார் மாநாட்டின் கீழ், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களை பாதுக்காக்க வேண்டியதே இதன் நோக்கமாகும. மேலும் ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றதால் இதற்கு அந்த பெயரே வைக்கப்பட்டது.
ராம்சார் அங்கீகாரம் என்பது உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களை அதாவது நீர்ப்பறவைகளுக்கு வாழ்விடங்களை வழங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதே ஆகும். அத்தகைய ஈரநிலங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றின் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதிலும் சர்வதேச ஆர்வமும் ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது.

ராம்சார் தளங்களின் முக்கியத்துவம்
உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான ஈரநிலங்களின் சர்வதேச வலையமைப்பை உருவாக்கி பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உலகின் 40% தாவர மற்றும் விலங்கு இனங்கள் ஈரநிலங்களில் இனப்பெருக்கம் செய்வதால் ஆபத்தான சூழ்நிலைக்கு அவசர கவனம் தேவை. சதுப்பு நிலங்கள் புலம் பெயர்ந்த பறவைகளுக்கு முக்கிய உணவு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது.
இந்தியாவின் ஈரநிலங்கள் 1,52,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 4.63% ஆகும். ஐந்தில் இரண்டு பங்கு உள்நாட்டு இயற்கை ஈரநிலங்கள் மற்றும் நான்கில் ஒரு பகுதி கடலோர ஈரநிலங்கள். இந்தியாவில் 19 வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன. மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு இந்தியாவின் மிகப்பெரிய ராம்சார் தளமாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அளித்துள்ள முக்கியத்துவம் இந்தியா ஈரநிலங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து
இருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக மேலும் ஐந்து இந்திய ஈரநிலங்கள் ராம்சார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்ட்வீட் செய்து இருந்தார்.

புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய ராம்சார் தளங்கள்
கரிகிளி பறவைகள் சரணாலயம்: கரிகிளி பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 62 ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த சரணாலயம் செங்கல்பட்டுக்கு தெற்கே சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
பள்ளிக்கரணை மார்ஷ் காப்புக்காடு: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு நன்னீர் சதுப்பு நிலமாகும். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் சில மற்றும் கடைசி இயற்கை ஈரநிலங்களில், நகரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு இதுவே ஆகும்.
பிச்சாவரம் சதுப்புநிலம்: பிச்சாவரம் சதுப்புநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது. 1100 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட சதுப்புநிலமான இது இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும்.
பாலா சதுப்பு நிலம்: மிசோரமில் உள்ள மிகப்பெரிய இயற்கை ஈரநிலம் பாலா சதுப்பு நிலமாகும். பசுமையான வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஈரநிலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.
சாக்ய சாகர்: மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் உள்ள மாதவ் தேசிய பூங்காவின் அழகிய சூழலியலின் ஒருங்கிணைந்த பகுதியாக சாக்ய சாகர் ஏரி உள்ளது. இது பல உயிரினங்களின் தாயகமாக உள்ளது.



Click it and Unblock the Notifications




