• Follow NativePlanet
Share
» »தமிழக மக்களுக்கு குட் நியூஸ் – ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை தொடக்கம்!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் – ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை தொடக்கம்!

மலிவான கட்டணத்தில் வசதியாக நீண்ட தூரம் பயணம் செய்ய உதவுவதால் ரயில் போக்குவரத்து பெரும்பாலான தமிழக பயணிகளுக்கு மிகவும் பிடித்த போக்குவரத்து முறையாக உள்ளது. தமிழகத்தில் ரயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நீங்கள் ராமேஸ்வரத்திற்கு புதிய வழித்தடத்தில் இருந்து பயணிக்கலாம். புதிய ரயிலின் பாதை, கட்டணம் உட்பட முக்கிய தகவல்கள் இதோ!

ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை துவக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இனி கோடை விடுமுறைக்கு பின் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அதனால் பயணிகளின் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி இருக்கிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவை துவங்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

newtrainlaunchedbetweenmangaluru

மங்களூரில் இருந்து புனிதஸ்தலத்திற்கு ரயில் சேவை

பகவான் ஸ்ரீராமசந்திரமூர்த்தியே சிவபெருமானை வழிப்பட்ட புனித ஸ்தலமான ராமேஸ்வரம் மகத்தான மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த புனித யாத்திரை நகரம் இந்து தொன்மங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்களுடன் தொடர்புடையது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் வருகை தருவதால், இப்போது மங்களூரில் இருந்து புதிய ரயில் சேவைகள் துவங்கப்படவுள்ளது.

பெரிதும் பயனடையப்போகும் யாத்ரீகர்கள்

மங்களூரு-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 22 பெட்டிகளைக் கொண்டிருக்கும், இதில் ஏசி, ஸ்லீப்பர் மற்றும் பொது பெட்டிகள் உட்பட பல்வேறு வகுப்புகள் உள்ளன. இந்த சேவையானது மங்களூரு மற்றும் ராமேஸ்வரம் இடையே நேரடி ரயில் பாதைக்கான பயணிகள் மற்றும் பயணிகள் சங்கங்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்கிறது, இது பயணிகளுக்கு வசதி மற்றும் அணுகலை வழங்குகிறது. மேலும், பழனி மற்றும் மதுரை போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் இந்தப் புதிய ரயில் சேவையால் பெரிதும் பயனடைவார்கள்.

Happy news for Tamil Nadu people

புதிய ரயிலைப் பற்றிய முக்கிய தகவல்கள்

1. துாத்துக்குடியில் இருந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு, 10:50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், மறுநாள் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.

2. மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி, ஞாயிறுகளில் இரவு 8:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி செல்லும்.

3. இந்த ரயில் கோவில்பட்டி சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும்.

4. அதே போல கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் காலை 11.45 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.

5. மருமார்கமாக ஞாயிறுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் அதிகாலை 5:50 மணிக்கு ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

6. பயணிகள் சங்கங்கள் மற்றும் பயணிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய சேவை, பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

More News

    Read more about: rameswaram mangaluru express
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+