• Follow NativePlanet
Share
» »சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – பல விமான சேவைகள் தாமதம் – இனியும் மழை இருக்குமா?

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை – பல விமான சேவைகள் தாமதம் – இனியும் மழை இருக்குமா?

சென்னையின் பகுதிகளில் ஜூன் 17 மற்றும் 18 இடைப்பட்ட இரவில் பெய்த கனமழையால் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. பல பெரிய பெரிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன, மழை காரணமாக பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருவதற்கும் புறப்படுவதற்கும் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய், டெல்லி மற்றும் புனே ஆகிய இடங்களுக்குச் செல்லும் சேவைகள் தாமதமானவை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்த மழையால், கடும் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா?

சென்னையில் பெய்த கனமழையால் மூழ்கிய தாழ்வான பகுதிகள்

ஜூன் 17-18 தேதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்த நிலையில் திங்கள் இரவு சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கோடம்பாக்கம், அடையார், மாம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை வாசிகள்

நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெப்பம் தணிந்தது. தாம்பரம், அசோக் நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், குன்றத்தூர், அனகாபுத்தூர், ஆலந்தூர், கோடம்பாக்கம், போரூர், ராமாவரம், மேற்கு மாம்பலம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்கள் இந்த மழையினால் சந்தோஷம் அடைந்தனர்.

rainfall and thunderstorm create chaos in chennai

எந்த ஏரியாவில் எவ்வளவு மழை?

தமிழ்நாடு வெதர்மேன் கருத்துப்படி, பூந்தமல்லியில் 104 மி.மீ மழையும், சோழிங்கநல்லூர் 82 மி.மீ, செம்பா 70 மி.மீ, திருவேற்காடு 62 மி.மீ, மடிப்பாக்கம் 50 மி.மீ, மீனா 43 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தமிழகத்தின் விரிஞ்சிபுரம் கே.வி.கே (வேலூர் மாவட்டம்) 70 மிமீ மழையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி ஏஆர்ஜி 60 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

சென்னையில் தாமதமான விமான சேவைகள்

சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் விமானம் துண்டிக்கப்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை காரணமாக பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருவதற்கும் புறப்படுவதற்கும் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய், டெல்லி மற்றும் புனே ஆகிய இடங்களுக்குச் செல்லும் சேவைகள் தாமதமானவை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

rainfall and thunderstorm create chaos in chennai

மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா?

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடற்கரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News

    Read more about: chennai news rain fall tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+