Search
  • Follow NativePlanet
Share
» »ஓசூர் சர்வதேச விமான நிலையம் என்ன ஆச்சு – புதிய பிரச்சினை கிளப்பும் கர்நாடக அரசு!

ஓசூர் சர்வதேச விமான நிலையம் என்ன ஆச்சு – புதிய பிரச்சினை கிளப்பும் கர்நாடக அரசு!

தமிழகத்தின் முக்கிய தொழில்துறை நகரங்களில் ஒன்றான ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதற்கு ஏற்ப மாநில அரசு, மத்திய அரசிடமும், மத்திய அமைப்புகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்க 5 இடங்களைத் தமிழ்நாடு அரசு பட்டியலிட்ட நிலையில் இதில் 2 இடங்கள் சமீபத்தில் தேர்வு செய்தது! ஆனால் இதில் கர்நாடக அரசு சார்பில் இருந்து நெருக்கடிகள் எழுந்து வருவதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன!

தமிழகத்தில் புதிய சர்வதேச விமான நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரை தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்கும் நோக்கில் ஓசூரில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது.

Airport

தொழில்துறையால் பரபரப்பாகி வரும் ஓசூர்

ஓசூரில் அண்மை காலமாக மின்சார வாகனங்கள் போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக தொழில்துறையின் முக்கிய இடமாக ஓசூர் விளங்கி வருகிறது. ஓசூரில் அமைக்கப்படவுள்ள பசுமைவெளி விமான நிலையத்திற்காக இரண்டு இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2 இடங்களை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. முதலில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 இடங்களாக அவை குறைக்கப்பட்டு உள்ளது. ஓசூர் விமானம் நிலையம் அமைப்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் தேர்வு

அதன்படி, தோகரை அக்ரஹாரம், சூளகிரி, தசபள்ளி மற்றும் தனியார் விமான ஓடுதளம் அருகேயுள்ள இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. "விமான நிலைய ஆணையத்தின் அறிக்கையின் படி, 2 இடங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது" என நம்பகுத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசு

மத்திய அரசுக்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் படி 2033 ஆம் ஆண்டு வரை 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு எந்த சர்வதேச விமான நிலையத்தையும் அமைக்கக் கூடாது என்ற கண்டிஷன் உள்ளது. இந்த ஓசூர் விமான நிலைய திட்டம் அந்த ஒப்பந்தத்தைத் தாண்டி எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதைத் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது தடை சான்றிதழ் வாங்கி உள்ளது. அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் மத்திய அரசு பெங்களூரை சுற்றி புதிய விமான நிலையம் அமைக்க வாய்ப்பு கொடுக்காது. இதை பயன்படுத்தி ஓசூரில் விமான நிலையம் அமைக்க பெங்களூர் எதிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

More News

    Read more about: hosur travel airport news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+