Search
  • Follow NativePlanet
Share
» »கண்களை திறந்த ராமர் சிலை – அயோத்தியில் ராமர் முகம் மாறியது எப்படி? அதிர்ந்து போன சிற்பி!

கண்களை திறந்த ராமர் சிலை – அயோத்தியில் ராமர் முகம் மாறியது எப்படி? அதிர்ந்து போன சிற்பி!

ராமர் சிலை அயோத்தியில் நிறுவப்படுவதற்கு முன்னர் வெளிவந்த புகைப்படங்களை நாம் அனைவருமே பார்த்து இருப்போம். அயோத்தியில் 'பிரான் பிரதிர்ஷ்டை'க்குப் பிறகு கோவிலில் வைக்கப்பட்ட சிலையின் முகம் மாறியதை நாமே உணர்ந்து இருக்கலாம். கண்களை திறந்து, புன்முறுவலோடு சிரித்தப்படி பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு காட்சி கொடுக்கும் புகைப்படங்களை நாம் பார்த்து இருப்போம். ஆனால், ராமர் சிலையை செதுக்கிய சிற்பி 'இது நான் வடிவமைத்த சிலை இல்லை, முகம் முற்றிலும் மாறிவிட்டது, ஸ்ரீ ராமர் அந்த சிலைக்குள் வந்துவிட்டார்' என்று கூறுகிறார்!

சிலைக்குள் பகவான் ஸ்ரீ ராமர் வந்துவிட்டாரா?

ராமர் சிலையை வடிவமைத்த மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், அயோத்தியில் நடந்த பிரான் பிரதிர்ஷ்டை விழாவிற்குப் பிறகு ராம் லல்லா முற்றிலும் வித்தியாசமாகத் தெரிந்தார் என்று கூறியுள்ளார். "பகவன் ஸ்ரீராமர் முற்றிலும் வித்தியாசமாகத் தெரிந்தார். இது என்னுடைய வேலையல்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பிரான் பிரதிர்ஷ்டை விழாவிற்குப் பிறகு பகவான் ஸ்ரீ ராமர் முற்றிலும் மாறிவிட்டார்" என்று யோகிராஜ் அளித்த பேட்டியில் கூறினார்.

beforeandafterpranpratishthaoframidol

நுணுக்கமான பாரம்பரிய வேலைப்பாடுகள்

மூன்று தளங்களில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, தரைத்தளம் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கிறது, அதே சமயம் முதல் தளம் ராஜஸ்தானின் பரத்பூரின் இளஞ்சிவப்பு மணற்கல்லான பன்சி பஹர்பூரால் வடிவமைக்கப்பட்ட ராமரின் தர்பாரின் பிரம்மாண்டத்தில் பார்வையாளர்களை மூழ்கடிக்கும். இந்த கோவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், சிகரம் உட்பட 161 அடி உயரமும் கொண்டது. மூன்று தளங்கள் மற்றும் 12 வாயில்களுடன், கட்டிடக்கலையின் கம்பீரத்திற்கு ஒரு கம்பீரமான சான்றாக நிற்கிறது.

பிரமாண்ட கட்டுமான செலவு

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா 2022 இல் பிரமாண்ட ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், பிப்ரவரி 5, 2020 முதல் மார்ச் 31, 2023 வரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ரூ.900 கோடி செலவிட்டதாக PTI அறிக்கை தெரிவித்தது.

கோலாகலமான திறப்பு விழா கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ராம் ஜென்ம பூமி' திறப்பு விழா மிக கோலாகலமாக அரங்கேறியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற ராமர் பிரதிர்ஷ்டை நிகழ்வில் சச்சின், ரஜினிகாந்த், அம்பானி, அதானி மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மங்களகரமான தருணத்தைக் கொண்டாட, அங்கு ஒன்று கூடிய பிரபலங்களுக்கும், விழாவுக்கும் வருகை தந்த முக்கியஸ்தர்களுக்கும் சிறப்புப் பிரசாதப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

ramlallaidolbefore

மாறிய ராமர் சிலையின் முகம்

பிரான பிரதிஷ்டை நிகழ்வுக்கு பிறகு கடந்த 23 ஆம் தேதி முதல் பக்தர்கள் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பால ராமர் சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ், பிரான பிரதிஷ்டைக்கு பிறகு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் பிரதிஷ்டை செய்த பிறகு ராமரின் சிலை அப்படியே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

முகம் மாறிய சிலையை பார்த்து வியந்த சிற்பி

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அயோத்தி ராமர் கோவிலுக்காக நான் வடிவமைத்த ராமர் திருமேனி பிராண பிரதிஷ்டை செய்து முடித்த பிறகு உருமாறி விட்டது. குழந்தை ராமர் சிலையில் கண்ணும் முக பாவனையும் அப்படியே மாறி தோற்றமளிக்கிறது. நான் வடிவமைத்தபோது ராமர் சிலை இப்படி இல்லை. இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை. ராமரின் திருமேனியை வடிவமைக்கும் போது நாள்தோறும் ஒரு குரங்கு எங்கள் இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு சென்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு குழந்தை ராமர் சிலையில் பல வித்தியாசங்கள் காணப்படுகிறது. சிலை உருமாறி காட்சியளிக்கிறது. இவ்வாறு சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார்.

More News

    Read more about: ayodhya ram mandir
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+