Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை - யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் லிஸ்டில் ஹொய்சாலா கோயில்கள்!

இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை - யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் லிஸ்டில் ஹொய்சாலா கோயில்கள்!

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இந்தியாவின் ஹொய்சாள பேரரசின் கோயில்கள் இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற அமர்வில் ஹொய்சாள கோயில்களின் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரித்து, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிற்கு மிகவும் பெருமையான தருணமாகும்!

கோவில் கட்டுவதில் ஆர்வம் காட்டிய ஹொய்சாலர்கள்

10 ஆம் நூற்றாண்டில் மன்னர் நிருப காமாவால் நிறுவப்பட்ட ஹொய்சால வம்சம், தென்னிந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தில் முக்கியத்துவம் பெற்றது. அவர்களின் ஆட்சி கலாச்சாரம் மற்றும் கலைகளில் கணிசமான முன்னேற்றங்களால் குறிக்கப்பட்டது. ஹொய்சால வம்சத்தினர் அனைவரும் கோவில்கள் கட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

1

பல யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் அடங்கிய கர்நாடகா

ஹொய்சாலர்களின் கட்டிடக்கலை சாதனைகள், குறிப்பாக கோயில் கட்டுமானத்தில், பல்வேறு தென்னிந்திய கட்டிடக்கலை தாக்கங்களின் கலவையை வெளிப்படுத்துகிறது. ஹம்பி இடிபாடுகள், பட்டடக்கல் நினைவுச்சின்னங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற பல யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களுக்கு கர்நாடகம் ஏற்கனவே தாயகமாக உள்ளது.

42வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக ஹொய்சாலாவின் புனித சின்னங்கள்

இப்போது கர்நாடகாவின் பேலூர், ஹலேபிட் மற்றும் சோமநாதபுராவில் உள்ள ஹொய்சலா கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 42வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக ஹொய்சாலாவின் புனித சின்னங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

காலத்தால் அழியாத கட்டிடக்கலை

ஹொய்சாள கட்டிடக்கலை என்பது மைசூர் அருகே கர்நாடகா பகுதியில் உருவாக்கப்பட்ட இந்து கோவில் கட்டிடக்கலை ஆகும். இது 1050-1300 A.D காலப்பகுதியில் பேலூர், ஹளேபிட் மற்றும் சிருங்கேரி ஆகிய முக்கிய இடங்களுடன் வளர்ந்தது. ஹொய்சாளக் கோயில்களின் காலத்தால் அழியாத அழகும், சிக்கலான விவரங்களும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் நம் முன்னோர்களின் விதிவிலக்கான கைவினைத்திறனுக்குச் சான்றாகும்.

2

நுணுக்கமான ஹொய்சாள கட்டிடக்கலையின் அம்சங்கள்

1. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட கோவில்கள் கலப்பின அல்லது வேசரா என்று அழைக்கப்படுகின்றன, காரணம் இது வழக்கமாக கோவில்கள் கட்டும் பாணியான திராவிட கட்டிடக்கலையோ அல்லது நகரா கட்டிடக்கலையோ அல்ல.

2. நாகரா & திராவிட கட்டிடக்கலைக்கும் ஹொய்சாள கட்டிடக்கலைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், கோயில் வளாகம் பஞ்சாயத்து பாணியில் முதன்மை கோயில் மற்றும் நான்கு துணை கோயில்களுடன் அமைக்கப்பட்டன. பின்பு அவை நட்சத்திர வடிவில் மாற்றியமைக்கப்பட்டன.

3. ஹொய்சாள கட்டிடக்கலையின் படி ஒரு மையத் தூண் மண்டபத்தைச் சுற்றி வெவ்வேறு தெய்வங்களின் பல சன்னதிகள் கட்டப்பட்டன.

4. இந்த சன்னதிகள் ஒரு நட்சத்திர வடிவமைப்பில் சிக்கலான முறையில் நிறுவப்பட்டுள்ளன.

5. சிற்பங்கள் மூலம் கோயிலின் அலங்காரத்திற்கு பாரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

6. உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள், தெய்வங்கள் அணிந்திருந்த நகைகள் கூட நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.

7. கோயில்கள் ஜகதி என்று அழைக்கப்படும் உயர்த்தப்பட்ட மேடையில் கட்டப்பட்டுள்ளன.

8. ஹொய்சாள கோவில்கள் இது போன்ற நுணுக்கமான வேலைப்பாடுடன் தனித்து நின்று உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

9. மொத்தமாக மூன்று கோவில்களுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் பேலூரில் உள்ள சென்னகேசவா கோயில், ஹளேபிடுவில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோயில், சோமநாதபுராவில் அமைந்துள்ள கேசவா கோயில் ஆகியவை அடங்கும்.

இந்தியாவிற்கு வாக்களித்த நாடுகள்

ஜப்பான், நைஜீரியா, ஓமன், கிரீஸ், இத்தாலி, ரஷ்யா, எத்தியோப்பியா, சாம்பியா, தென்னாப்பிரிக்கா, கத்தார், மாலி, செயின்ட் வின்சென்ட், பெல்ஜியம், அர்ஜென்டினா, மெக்ஸிகோ, சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து ஆகியவை கர்நாடகாவில் உள்ள ஹொய்சாலா கோயில்களை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக பட்டியலிடுவதற்கான இந்தியாவின் முயற்சியை ஆதரித்த நாடுகளில் அடங்கும்.

பிரதமர் மோடி பெருமிதம்

ஹொய்சாளர்களின் அற்புதமான புனித கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது இந்தியாவிற்கே பெருமையான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இது போல எந்த கோவிலுக்கு உலக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?

More News

    Read more about: temples of india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+