Search
  • Follow NativePlanet
Share
» »குளோபல் ஐகானிக் மியூசிக் ஃபெஸ்டிவல் ஆன லோலாபலூசா 2023 ஜனவரியில் இந்தியாவில் கால் பதிக்கிறது!

குளோபல் ஐகானிக் மியூசிக் ஃபெஸ்டிவல் ஆன லோலாபலூசா 2023 ஜனவரியில் இந்தியாவில் கால் பதிக்கிறது!

உலகின் மிகப்பெரிய பல வகை இசை விழாக்களில் ஒன்றான லோலாபலூசா, ஜனவரி 2023 இல் இந்தியாவில் முதன் முதலாக கால் பதிக்கிறது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற இசை விழாவான லோலாபலூசா இந்தியாவில் அறிமுகமாவது ஆசிய மக்களிடையே ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

fyoq-a-uuaiu-music -festival

பிரபலமான ராக் இசைக்குழுவான ஜேன்ஸ் அடிக்ஷனின் ஒரு பாடகரான பெர்ரி ஃபாரெல் இந்த லோலாபலூசா 1991 இல் சிகாகோவில் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் கடந்த 31 ஆண்டுகளாக, லோலாபலூசா நிகழ்ச்சி வெகு பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இது அமெரிக்கா, சிலி, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் விமர்சியாக நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்தமாக ஏழு நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்து இருந்த இந்த நிகழ்ச்சி இப்போது முதன் முதலாக ஆசியக் கண்டத்தில், அதுவும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஆம்! இது மிகவும் உற்சாகமான ஒரு விஷயமாகும்.

ஏனென்றால் லோலாபலூசா உலக இசை ரசிகர்ளிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். எந்த நாட்டிற்கு இவர்கள் செல்கிறார்களோ அந்த நாட்டின் பிரத்யேக இசையையும், ராக், பாப் ,ஜாஸ் போன்றவை கலந்தும் இவர்கள் இசைக்கும் பன்முகத்தன்மை உலகெங்கிலும் இவர்களுக்கு என ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறது.

audience-lollapalooze -music-fest

மும்பையில் அடுத்த ஆண்டு ஜனவரி 28 மற்றும் ஜனவரி 29 ஆகிய தேதிகளில் இசை விழா நடைபெறவுள்ளது. விழா நடைபெறும் இடம் பற்றிய தகவல் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. 20 மணிநேர நேரடி இசையுடன் நான்கு மேடைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் பதிவு செய்த ரசிகர்களுக்கான இயர்லி பர்ட் டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 1, 2022 அன்று நேரலையில் கிடைக்கும். இதன் விலை 7,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

"இந்தியாவின் இசையானது ஆன்மாவுடன் சம்மந்தப்பட்ட ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, அது நம்மை இழுக்கும் வல்லமை பெற்றது. லோலாபலூசா என்பது ஒற்றுமை, அமைதி மற்றும் கல்விக்கான ஒரு கருவியாகும். இது இசை மற்றும் கலையின் உலகளாவிய மொழிகளைப் பயன்படுத்தி பொதுவான தளத்தைக் கண்டறியும். நீங்கள் உற்சாகமாக இருக்கலாம், நாங்களும் உற்சாகமாகவும் ஆவலுடனும் இருக்கிறோம்" என ஃபாரெல் ஊடங்ககளில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியை புக் மை ஷோ தொகுத்து வழங்குகிறது, நாம் டிக்கெட்டுகளையும் அங்கிருந்தே பெறலாம். பாப், ராக், மெட்டல், பங்க் ராக் மற்றும் ஹிப்-ஹாப் மற்றும் இண்டி, எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஆகிய அனைத்தையும் நாம் இங்கு கண்டுகளிக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நழுவ விடாதீர்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X