Search
  • Follow NativePlanet
Share
» »அழகிய ஜிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்தியாவின் மாபெரும் இசைத் திருவிழா – விவரங்கள் இங்கே!

அழகிய ஜிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்தியாவின் மாபெரும் இசைத் திருவிழா – விவரங்கள் இங்கே!

நாடெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு ஓர் இனிய செய்தி! ஆம் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இப்போது ஜிரோ ஃபெஸ்டிவல் ஆஃப் மியூசிக் மிக பிரமாண்டமாக அரங்கேற இருக்கிறது.

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2, 2022 வரை இந்தியாவின் மிகப்பெரிய வெளிப்புற இசை விழாவை நடத்த அருணாச்சலப் பிரதேசம் தயாராகி வருகிறது!

ziro

அழகிய ஜிரோ பள்ளத்தாக்கில் மாபெரும் இசை திருவிழா

இந்த திருவிழா அருணாச்சல பிரதேசத்தின் கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய ஜிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும். அபதானி பழங்குடியினரின் தாயகமான ஜிரோ பள்ளத்தாக்கு பயணிகளுக்கு பசுமையான நெல் வயல்களையும், பைன் மரங்களையும், இனிமையான காலநிலையையும் வழங்குகிற ஒரு அழகிய இடமாகும். இங்கு தான் ஒவ்வொரு ஆண்டும் ஜிரோ ஃபெஸ்டிவல் ஆஃப் மியூசிக் (ZFM) இசை திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும்.

இயற்கையின் மடியில் அமர்ந்து, புத்துணர்ச்சியோடு இசையைக் கேட்டு ரசிப்பது போல் கற்பனை செய்து பாருங்களேன், வேறு எதுவும் இதை விட மிக அற்புதமான இருக்காது என்பதை நீங்களே உணர்ந்து கச்சேரிக்கு ஒரு டிக்கெட் புக் செய்து விடுவீர்கள்!

ziro-2-1664024025.jpg -Properties

நீங்கள் ஏன் தவிர்க்காமல் பங்கு கொள்ள வேண்டும்?

பிரமாண்டமாக நடைபெறும் இந்த 4 நாள் திருவிழாவில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஏராளமான கொண்டாட்டங்கள் உள்ளன. ராஜஸ்தானின் மேவாரைச் சேர்ந்த ஜம்மே கானுடன் இணைந்து சிக்னேச்சர் டேனி, இந்தியாவின் பழமையான ராப் பாடகர் பாபா சேகல், வடகிழக்கின் சிம்பா அப்ரோர் பைலோ, லிதுவேனியன் பாப் சென்சேஷன் லியோன் சோமோவ் & டிலேட்டா போன்ற திறமையான பல இசைக் கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க உள்ளனர்.

எந்த வகையான இசையை நீங்கள் விரும்பினாலும், இந்த இசை திருவிழாவில் நீங்கள் அதை அனுபவிக்கலாம். அருணாச்சலப் பிரதேசத்தின் உதட்டைப் பிசையும் உணவு வகைகளையும் பார்வையாளர்கள் சுவைக்கலாம். நிகழ்வுகள் ஏராளமான வகை வகையான உணவு விருப்பங்களைக் கொண்டிருக்கும் மற்றும் அவற்றை உண்ணுவது நிச்சயமாக ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் தானே!

ஆகவே இதில் கலந்துக்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்ய இப்போதே முந்திக் கொள்ளுங்கள்!

More News

    Read more about: ziro music festival
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+