Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை மரீனா கடற்கரையில் இந்திய விமானப்படை கண்காட்சி மற்றும் சாகசங்கள் – பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!

சென்னை மரீனா கடற்கரையில் இந்திய விமானப்படை கண்காட்சி மற்றும் சாகசங்கள் – பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!

இந்திய விமானப்படை நிறுவப்பட்டு தனது 92 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த வரலாற்று நிகழ்வை கண்டிப்பாக கொண்டாட வேண்டும் தானே. இதற்கான முழு பணிகளும் சென்னையில் அரங்கேறி வருகின்றன. ஆம்! இந்த வருடம் இந்திய விமானப்படை கொண்டாட்டம் நடைபெறுவது சென்னை மரீனா கடற்கரையில் தான். ரஃபேல், சுகோய் மற்றும் எச்ஏஎல் தேஜாஸ் போன்ற முன்னணி போர் விமானங்களையும், விமானப்படையின் கண்கவர் கண்காட்சிகளையும் வான்வழி சாகசங்களையும், பொதுமக்களாகிய நாம் இலவசமாக சென்னை மரீனாவில் கண்டு களிக்கலாம்!

சென்னை மரீனாவில் விமானப்படை தின கொண்டாட்டம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை தின விழாவை நடத்தும் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான காட்சி தமிழகத்தின் சென்னையில் அக்டோபர் 8ம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் (IAF) 92வது எழுச்சி தினத்தை குறிக்கிறது மற்றும் டெல்லிக்கு வெளியே கொண்டாடப்படும் மூன்றாவது சந்தர்ப்பமாகும். முந்தைய கொண்டாட்டங்கள் முறையே 2022 மற்றும் 2023 இல் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றன. இப்போது தமிழகத்தின் மரீனா கடற்கரையில் நடக்கவிருப்பதை நாம் கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாது.

92 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய விமானப்படை

1932 ஆம் ஆண்டு இந்த நாளில் விமானப்படை நிறுவப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவத்தை உள்ளடக்கிய இந்திய ஆயுதப் படைகளில் சேர்வது என்பது பல இளம் இந்தியர்களின் கனவு. தேசத்திற்குச் சேவை செய்வதும், வானத்தில் உயரமாகச் செல்வதும் பலருக்குப் பேரார்வம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இன்னும் வானத்தில் பறக்கும் விமானத்தைப் பார்த்துப் பிரமிப்புடன் பார்த்து ரசிக்கலாம்.

Indian air force celebrates 92nd anniversary in chennai

உலக அளவில் நான்காவது பெரிய விமானப்படை

விமானப்படையில் 1,130 போர் விமானங்கள் மற்றும் 1,700 பிற பயன்பாட்டு விமானங்கள் பொருத்தப்பட்ட சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்திய விமானப்படை உலக அளவில் நான்காவது பெரிய விமானப்படையாக உள்ளது. பேரிடர் நிவாரணம், போர் மண்டலங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதிலும், எல்லைகளைப் பாதுகாப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்தியா தனது விமானப்படையை சர்வதேச அளவில் மூலோபாய ரீதியாக கட்டமைத்துள்ளது.

கண்காட்சியில் இடம் பெரும் முன்னணி விமானப்படை விமானங்கள்

இந்த விமான கண்காட்சியில் ரஃபேல், சுகோய் மற்றும் தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் இடம்பெறும். ஆகாஷ் கங்கா ஸ்கைடைவிங் குழுவினர் மூச்சடைக்கக்கூடிய வான்வழி ஸ்டண்ட்களையும் நிகழ்த்துவார்கள். இந்திய விமானப்படையின் முக்கிய விமானமாக கருதப்படும் ரஃபேல், மணிக்கு 2,223 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

இந்த நிகழ்வில் அதிநவீன ரேடார், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்புகள், புதிய ஆயுதங்கள் மற்றும் பிற நவீன வசதிகள் காட்சிப்படுத்தப்படும். இதேபோல், சென்னையில் நடைபெறும் விமான கண்காட்சியில் தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முக்கிய விமானங்களின் வான் காட்சிகள் இடம்பெறும்.

Indian air force celebrates 92nd anniversary in chennai

எங்கே, எப்போது?

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த பரபரப்பான நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Indian air force celebrates 92nd anniversary in chennai2

கண்டிப்பாக சென்று வாருங்கள் மக்களே

இந்தக் காட்சியைக் காண பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள விமானப்படை, அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. தேசிய அளவிலான கொண்டாட்டம் மற்றும் வசீகரிக்கும் அணிவகுப்பு ஆகியவை அக்டோபர் 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடைபெறும். இதை சென்னை மக்களாகிய நாம் கட்டாயம் மிஸ் பண்ணகூடாது!

More News

Read more about: chennai tamilnadu marina
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+