Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த இயற்கை அதிசயம் – ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 10,000!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த இயற்கை அதிசயம் – ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 10,000!

ஏப்ரல் 1, 2024 சென்னையை பொறுத்தவரை ஒரு அழகான நாள்! ஆம், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் மற்றொரு முயற்சியாக, 10,000க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில் அன்றைய நாளில் கடலில் விடப்பட்டன. இதனால் இது ஒரு விசேஷ நாள் தானே! இந்த அரிய அழகிய சம்பவத்தை காண சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைதியான முறையில் மக்கள் பலர் திரண்டு கண்டு ரசித்தனர்!

பெசன்ட் நகர் கடற்கரையில் 10,082 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

ஆலிவ் ரிட்லி ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பருவத்தைத் தொடர்ந்து, பொதுவாக மார்ச் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் தொடக்கம் வரை, 10,082 ஆலிவ் ரிட்லி ஆமைகள் சமீபத்தில் சென்னை கடற்கரையில் கடலில் விடப்பட்டன. இந்த ஆமைகளுக்கான பயணம் ஆண்டின் தொடக்கத்தில் இருளின் மறைவின் கீழ் கடற்கரைகளில் முட்டையிடும் போது தொடங்குகிறது. இந்த முட்டைகள் கவனமாக சேகரிக்கப்பட்டு, அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் வனத்துறையால் கடற்கரைகளில் அமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்களுக்கு மாற்றப்படுகின்றன.

oliveridleyturtlehatchlingsreleased

பாதுகாப்பாக சேகரிக்கப்படும் ஆமைக் குஞ்சுகள்

இந்த காலகட்டத்தில், SSTN (சென்னை மாணவர்களின் கடல் ஆமை பாதுகாப்பு நெட்வொர்க்) போன்ற நிறுவனங்கள் ஆமை நடைகளை ஏற்பாடு செய்கின்றன, இது குஞ்சு பொரிக்கும் கட்டம் தொடங்கும் முன் பார்வையாளர்கள் இந்த மென்மையான, வெல்வெட் முட்டைகளை சேகரிப்பதில் பங்கேற்க அனுமதிக்கிறது. அவர்கள் கண்டெடுத்த ஆமை முட்டைகளை பாதுகாப்பாக காப்பகங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சரியான குஞ்சு பொரிக்கும் தருணம் வந்தவுடன் அவை குஞ்சு பொறிக்கின்றன. பின்னர் அந்த அழகிய ஆமைக் குஞ்சுகள் கடலுக்கு பாதுகாப்பாக வழியனுப்பி வைக்கப்விடப்படுகின்றன.

இது சென்னையின் கண்கவர் நிகழ்வு

திங்கள்கிழமை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மொத்தம் 10,082 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. "வனத்துறையில் இருந்து கடலுக்குள் ஆமைக் குஞ்சுகள் முதல் பயணத்தை மேற்கொள்வதைக் கண்டு அனைவரும் வியந்தனர்" என சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார். இது ஒரு கண்கவர் நிகழ்வு மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த ஆமை இனங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உள்ளன.

oliveridleyturtlehatchlingsreleased

சென்னை கடற்கரைகளில் ஆமைக் குஞ்சுகள்

வனத்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகள் இணைந்து 42,000 முட்டைகளை சேகரித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தொண்டர்கள் பெசன்ட் நகர், கோவளம், நீலாங்கரை மற்றும் புலிகாட்டில் ஏராளமான முட்டைகளை சேகரித்தனர். பின்னர், இந்த முட்டைகள் வெவ்வேறு கடற்கரைகளில் அமைந்துள்ள குஞ்சு பொரிப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.

பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

ஆமைக் குஞ்சுகள் கடலுக்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அழிந்து வரும் ஆமைகளைப் பாதுகாப்பதில் வனத்துறையின் முயற்சிகளைப் பாராட்டினர். ஜனவரி முதல் மே மாதம் வரை முட்டையிடுவதற்காக கரைக்கு வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் கூடு கட்டும் முக்கிய இடமாக தமிழக கடற்கரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு முயற்சி எடுக்கும் தமிழகம்

கடந்த சில ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும் ஏராளமான குஞ்சு பொரிப்பகங்களை அமைத்து, உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாற்றங்களைக் கண்காணிக்க ஓரிரு குஞ்சு பொரிப்பகங்கள் வானிலை கண்காணிப்பாளர்களுடன் கூட பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒன்பது மாவட்டங்களில் சுமார் 45 குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

More News

    Read more about: chennai turtle
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+