மும்பை வாசிகளுக்கும் டெல்லி வாசிகளுக்கும் இது ஒரு நற்செய்தி!
இந்த இரு பெரு நகரங்களில் இருந்தும் பெரு வாரியான மக்கள் கூட்டம் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு நாள் தோறும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமான பயணம் இல்லை. நீங்கள் ரயிலில் பயணம் செய்தாலும் கூட 20 முதல் 25 மணி நேரம் இல்லாமல் இலக்கை அடைய முடியாது.
அதே நேரத்தில் எல்லோராலும் விமானத்தில் பறக்கும் அளவுக்கு வசதியும் இல்லை. ஆனால் இப்போது நமக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆம்! ஸ்விட்ச் ஈஐவி 22 ரக பேருந்துகளை இந்திய போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் மும்பையிலிருந்து டெல்லிக்கு வெறும் 12 மணி நேரத்தில் சென்றிடலாம்.

போக்குவரத்து அமைச்சகத்தின் முயற்சி
பெருவாரியான மக்கள் கூட்டம் பெரு நகரங்களில் இருந்து சென்றுகொண்டு வருவதால் நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்றியமைத்து, நகர்ப்புற போக்குவரத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தி, குறைந்த கார்பன் தடம் மற்றும் அதிக பயணிகள் அடர்த்தி கொண்ட ஒருங்கிணைந்த மின்சார வாகனம் உருவாக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் பேரில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி, ஆகஸ்ட் 18, 2022 அன்று மும்பையில் ஸ்விட்ச் ஈஐவி 22 என்ற பெயரிடப்பட்ட அசோக் லேலண்ட் எலக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தினார்.

ஸ்விட்ச் ஈஐவி 22
அசோக் லேலண்ட்இன், ஸ்விட்ச் ஈஐவி 22 என்பது இந்தியாவின் முதல் மற்றும் தனித்துவமான மின்சார இரட்டை அடுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து ஆகும். இது இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு ரக பேருந்துகளாகும்.
ஸ்விட்ச் ஈஐவி 22 ஆனது சமீபத்திய தொழில்நுட்பம், அதி நவீன வடிவமைப்பு, மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் கிளாசியான அம்சங்களைக் கொண்டுள்ளது
சொகுசு ரக குஷன்களால் ஆன 65 இருக்கைகள் கொண்ட இந்த குளிர்சாதன பேருந்து சமகால ஸ்டைலிங் மற்றும் அசத்தலான என்ஜினியரிங் வேலைபாடுகளுடன்
பரந்த முன் மற்றும் பின்புற கதவுகள், இரண்டு படிக்கட்டுகள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு தரங்களுக்கு இணங்க அவசர கதவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மும்பை – டெல்லி 12 மணி நேரத்தில்
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பேருந்துகளை அறிமுகப்படுத்திய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி, "போக்குவரத்து தீர்வுகள், அரசாங்கத்தின் தொலைநோக்கு மற்றும் கொள்கைகள் மின்சார வாகனங்களை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன" என்றார். நாரிமன் பாயிண்டை டெல்லியுடன் இணைத்த பிறகு, மும்பையில் இருந்து டெல்லிக்கு 12 மணி நேரத்தில் செல்லக்கூடிய சொகுசு மின்சார பேருந்துகளை திட்டமிடுவோம் என்று கூறினார். 70 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால், நாம் விரைவில் இந்த பேருந்துகளில் ஏறி சவாரி செய்யலாம்.

மாற்றம் தேவைப்படும் நேரம்
டீசல் போன்ற மற்ற எரிபொருட்களை ஒப்பிடும் போது, ஆட்டோமொபைல் எரிபொருளாக மின்சாரம் மிகவும் செலவு குறைந்தது. நாட்டில் 35 சதவீத மாசுபாடு டீசல் மற்றும் பெட்ரோலால் ஏற்படுகிறது என்று அவர் கூறினார். அதே நேரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது
மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-சிஎன்ஜி, பயோ-எல்என்ஜி மற்றும் பச்சை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஆட்டோமொபைல் துறைக்கு இந்தியா பயன்படுத்தத் தொடங்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால் மின்சாரச் செலவு பெருமளவு குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையை தற்போதைய ரூ.7.5 லட்சம் கோடியில் இருந்து 2024-ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.



Click it and Unblock the Notifications




