Search
  • Follow NativePlanet
Share
» »ரயிலை மிஸ் பண்ணிட்டா மற்றொரு ரயிலில் பயணிக்கலாம்...அசர வைக்கும் ரயில்வேயின் புதிய அறிவிப்பு

ரயிலை மிஸ் பண்ணிட்டா மற்றொரு ரயிலில் பயணிக்கலாம்...அசர வைக்கும் ரயில்வேயின் புதிய அறிவிப்பு

நீங்கள் ஏதாவது ஒரு காரணத்தால், நீங்கள் டிக்கெட் புக் செய்த வைத்து, பயணம் செய்ய வேண்டிய ரயிலை தவறவிட்டு விட்டீர்களா? கவலையே படாதீங்க. என்ன செய்வது என்ற தடுமாற்றம் அல்லது பயணத்தை ரத்து செய்வது என எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் செல்லும் ஊருக்கும் செல்லும்யமற்றொரு ரயிலில் ஏறி உங்களின் பயணத்தை திட்டமிட்டபடி பயணிக்கலாம். அது எப்படி முடியும் என கேட்கிறீர்களா? ரயில்வே நிர்வாகம் புதிதாக கொண்டு வந்துள்ள விதிகள் அப்படி ஒரு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. என்னங்க ஒன்றும் புரியவில்லையா? தொடர்ந்து கீழே படிங்க...புரியும்.

Train

ரயில் டிக்கெட் முன்பதிவு :

இந்திய ரயில்வே என்பது நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயணிகளுக்காக தினசரி இயக்கும் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். பெரும்பாலான மக்கள் ரயிலில் பயனம் செய்வதற்காக டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், எதிர்பாராத காரணங்களால், சில பயணிகள் தங்களது ரயிலை தவறவிடலாம். அவ்வாறு தவறுவிடும் பட்சத்தில் அவர்கள் மனதில் முதலில் தோன்றும் கேள்வி, பணத்தைத் திரும்பப் பெற முடியுமா, இரண்டாவது கேள்வி அதே டிக்கெட்டைப் பயன்படுத்தி வேறொரு ரயிலில் பயணம் செய்ய முடியுமா? அல்லது புதிய டிக்கெட் வாங்க வேண்டுமா? என்பதுதான். இது குறித்து இந்திய ரயில்வே விதிகள் என்ன சொல்கிறது?

நீங்கள் உங்கள் ரயிலை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற சூழ்நிலையில், முதலில் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் பயணத்தை தொடர்ந்து செய்வதற்கான மாற்று வழிகளை உடனடியாக கண்டறியவேண்டும். ரயில் நிலையத்தில் உள்ள தகவல் பலகைகளை பார்க்கவும் அல்லது அதிகாரப்பூர்வ ரயில் இணையதளங்களைப் பயன்படுத்தி அடுத்த ரயிலின் நேரத்தையும் முன்பதிவு வாய்ப்புகளையும் சரிபார்க்கவும். நீங்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கியிருந்தால், அது எந்த விதமானது என்பதைப் பாருங்கள். சில டிக்கெட்டுகளுக்கு மாற்று பயணம் செயக்கூடியதாக இருக்கலாம். சிலவற்றுக்கு பணத்தை திரும்ப பெறலாம். எனவே உடன் ரயில்வே அதிகாரிகளை அணுகி உங்கள் விருப்பத்தை தெளிவுபடுத்துங்கள்.

பொதுவான டிக்கெட்டுடன் மற்றொரு ரயிலில் பயணம் செய்யலாமா?

பொதுவான டிக்கெட் வைத்திருந்தால் அதே வகை ரயிலில் பயணம் செய்யலாம். ஆனால் எக்ஸ்பிரஸ் அல்லது ரிசர்வ் செய்யப்பட்ட ரயில்களில் செல்ல அனுமதியில்லை. டிக்கெட் வழங்கும் அதிகாரியிடன் ஆலோசித்து உரிய அனுமதி பெற்ற பின்னர் பயணம் செய்யலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தாலும், நீங்கள் ரயிலை தவறவிட்டால் என்ன ஆகும்?

சில நேரங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ரயிலை தவறவிட்டால், நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட அதே டிக்கெட்டைப் பயன்படுத்தி மற்றொரு ரயிலில் பயணிக்க முடியாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ஒரு குறிப்பிட்ட ரயில், தேதி மற்றும் நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மீறி பயணம் செய்தால் அபராதம் செலுத்த நேரிடும். எனவே, சரியான அணுகுமுறை என்னவென்றால், (TDR) தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்து, மற்றொரு ரயிலுக்கு புதிய டிக்கெட்டை வாங்குவதாகும்.

ரயிலை தவறவிட்டால் பயணக் கட்டணம் பெற Ticket Deposit Receipt (TDR) தாக்கல் செய்யும் முறை:

நீங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தால் (TDR) தாக்கல் செய்து பணத்தை மீண்டும் பெற கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றவும்:
* IRCTC இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம், IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும்.
*"TDR Filing" விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் பயண விவரங்களை உள்ளிடவும்.
* தவறவிட்டதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
* கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

நீங்கள் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்திருந்தால் :

*ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் உதவி மையத்திற்கு செல்லவும்.
* உரிய படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் டிக்கெட் விவரங்களை வழங்கவும்.

TDR தாக்கல் செய்ய வேண்டிய நேரம்:

*ரயில் புறப்பட்ட 4 மணி நேரத்திற்குள் TDR தாக்கல் செய்ய வேண்டும்.
*பகுதி உறுதிப்படுத்தப்பட்ட அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள அனைத்துப் பயணிகளும் பயணிக்கவில்லை என்றால், ரயில் வருவதற்கு 72 மணிநேரம் வரை TDR தாக்கல் செய்யலாம்.
*IRCTC இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் TDR-களை ஆன்லைனில் தாக்கல் செய்ய முடியாது. அவர்கள் IRCTC க்கு இமெயில் அனுப்ப வேண்டும்.

பணத்தை திரும்ப பெறும் காலஅளவு:

உங்கள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்த பிறகு, திரும்ப பெறும் தொகை சில நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வரலாம்.

ரயில் டிக்கெட் ரத்து மற்றும் பணம் திரும்ப பெறும் விதிகள்:

*சாதாரண முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள், பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், சிறிய கட்டணக் கழிவுடன் பணத்தை திரும்ப பெறலாம்.
*Tatkal டிக்கெட்டுகள்: பெரும்பாலும் ரத்து செய்ய முடியாது, திரும்ப பெறும் வசதி கிடைக்காது.
* பயணிக்கும் நாளில் ரத்து: குறைந்தபட்ச கழிவுடன் சில வகை டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்.
* ஆன்லைன் ரத்து: IRCTC-யின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ரத்து செய்து பணத்தை திரும்ப பெறலாம்.
* காத்திருப்புப் பட்டியல் (WL) மற்றும் RAC (ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான முன்பதிவு) டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ரத்துசெய்து பணத்தைத் திரும்பப் பெறலாம். அதன் பிறகு, பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

ஒரு ரயிலை தவறவிட்டாலும், உங்கள் பயணம் முழுமையாக பாதிக்கப்பட தேவையில்லை. அமைதியாக இருந்து சரியான தீர்வுகளை கண்டுபிடித்தால், உங்கள் பயணம் சிறப்பாக முடியும். பொதுவான டிக்கெட்டின் விதிகளை அறிந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணத்தை தொடருங்கள். மேலும், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தால், அதற்குரிய விதிமுறைகளை அறிந்து பயன்படுத்துங்கள்.

More News

    Read more about: indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+