Search
  • Follow NativePlanet
Share
» »இனி புதுச்சேரிக்கு சட்டுன்னு போயிடலாம் – வந்துவிட்டது புதிய ரோடு!

இனி புதுச்சேரிக்கு சட்டுன்னு போயிடலாம் – வந்துவிட்டது புதிய ரோடு!

'மினி கோவா' என்று சுற்றுலாப் பயணிகளால் அன்புடன் அழைக்கப்படும் புதுச்சேரி அதன் பார்ட்டிகள், பப்கள், கடற்கரைகள், ஷாப்பிங் மற்றும் கஃபேக்களுக்கு மட்டும் சொந்தமில்லை. பல புராதன மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களுக்கும் புதுச்சேரி தாயகமாக உள்ளது. காசியை விட வீசம் அதிகம் கொண்ட திருக்காஞ்சி, ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருகாமேஸ்வரர் கோயில், புகழ்பெற்ற மணக்குள விநாயகர் ஆலயம் உட்பட பல கோயில்கள் உண்டு. அவற்றில் ஒன்றான, அறுபடை வீடுகளுக்கு நிகரான புகழ் வாய்ந்த மயிலம் முருகன் கோயிலும் அடங்கும், இனி இந்த இந்த முருகன் கோயிலுக்கு புதுவையில் இருந்து நீங்கள் சட்டென பறந்திடலாம், என்று உங்களுக்கு தெரியுமா?!

வெள்ளிமேடுப்பேட்டை - புதுச்சேரி மயிலம் சாலை விரிவு

நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமேடுப்பேட்டை - புதுச்சேரி மயிலம் சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை பூமி பூஜை மூலம் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். திண்டிவனம் அருகே உள்ள தாழுத்தாளியில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானுடன் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

New roadways

இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம்

திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், வெள்ளிமேடுப்பேட்டை புதுச்சேரி (வழி) மயிலம் சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை பூமி பூஜை மூலம் இன்று (26.02.2025) அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

ரூ.32.5 கோடி செலவில் தயாராகும் சாலை

புதுச்சேரியை இணைக்கும் இந்த சாலை, திட்டத்தின்படி, 5 கி.மீ தூரத்திற்கு அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-24 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ரூ.32.5 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

New roadways

தமிழகத்தை மேம்படுத்தும் திட்டங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்குமான பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு சாலை வசதி இன்றியமையததாக இருந்திட வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் நகர்ப்பகுதிகளில் மேம்பாடு அடையும் வகையில் உயர்தர சாலைகள் அமைப்பதற்கான தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

புகழ்பெற்ற கோயில்கள் இணைப்பு

இச்சாலையானது புகழ்பெற்ற மைலம் முருகன் கோவில், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவில், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும், இப்பகுதியில், 300-க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கும் மற்றும் சேதராப்பட்டு தொழிற்சாலைகளுக்கும் செல்லும் வாகனங்கள் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அனைத்தும் இச்சாலை வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை விரிவுபடுத்தப்படுவது போக்குவரத்தை இன்னமும் எளிதாக்கும்.

புதிய பேருந்துகளை எதிர்பார்க்கலாம்

நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவால் 12 மாதங்களில் முழுப் பணியும் முடிக்கப்படும். இந்தச் சாலை LED விளக்குகள், ஓடுகள் பதிக்கப்பட்ட நடைபாதை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைக் கொண்டுவரும். அகலப்படுத்தப்பட்டவுடன், இந்தப் பகுதி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உட்பட அதிக அதிர்வெண் பேருந்து சேவைகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+