Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை – கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை – கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!

நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் பல வழித்தடங்களில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. தற்போது புதிய வந்தே பாரத் ரயில் சேவை கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூர் இடையே துவங்கப்படவுள்ளது. இதனை இரு நகரங்களைச் சார்ந்த பொதுமக்களும் பயணிகளும் வெகுவாக வரவேற்றுள்ளனர். புதிய ரயில் சேவை சேவை எப்போது துவங்கும், கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இதோ!

இரு நகரங்களுக்கு இடையே முதல் அதிவேக ரயில்

பெங்களூருவிற்கும், கோயம்புத்தூருக்கும் இடையேயான 385 கி.மீ தூரத்தை ரயிலில் கடக்க சரியாக 7 மணி நேரம் ஆகிறது. பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அல்லது சதாபதி எக்ஸ்பிரஸ் போன்ற அதிவிரைவு ரயில் இல்லை. எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என்ற ஒரே ஒரு ரயில் மட்டுமே பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் இடையே தினசரி இயக்கப்படுகிறது. இப்போது புதிதாக அரை அதிவேக ரயில் இந்த பாதையை விரைவில் அலங்கரிக்கப் போகிறது.

vandebharat

மகிழ்ச்சியில் பயணிகள்

பெங்களூர் கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதை தென்னிந்திய பயணிகளுக்கு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றை இணைக்கும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கர்நாடகா மற்றும் தமிழ்நாடுவை நேரடியாக இணைக்கும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையாக இது மாறும். இதனால் இரு நகரங்களில் உள்ள பயணிகளும் பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

7 நிலையங்களில் நின்று செல்லும்

கோயம்புத்தூர் பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி சந்திப்பு, ஓசூர், தர்மபுரி, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர் மற்றும் கோவை சந்திப்பு ஆகிய இடங்களில் நின்று செல்லும். பெங்களூர் கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே 385 கிமீ தூரம் செல்லும் போது 7 நிலையங்களில் நின்று செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 மணி நேரம் மிச்சமாகும்

கோயம்புத்தூர் பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு சந்திப்பை காலை 11:30 மணிக்கு சென்றடையும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வரை பயணம் செய்ய மொத்தம் 5 மணி நேரம் ஆகும். இதனால் 2 மணி நேரம் மிச்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vandebharat

கட்டணம் எவ்வளவு?

ஆதாரங்களின்படி, கோயம்புத்தூர் பெங்களூர் வந்தே பாரத் விரைவு ரயிலுக்கு ஏசி நாற்காலி கார் வகுப்பில் ஒரு பயணத்திற்கு சுமார் 1315 ரூபாய் மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய 2275 ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறுகையில், இரு நகரங்களுக்கு இடையேயான வழித்தடத்தை இந்திய ரயில்வே தீவிர பரிசீலனை செய்த பிறகு விரைவில் அறிவிப்பு வெளியாகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நடக்கும் இரண்டாவது வந்தே பாரத் இதுவாகும். அறிவிப்பு வெளியான ஆறு மாத காலத்திற்குள் நீங்கள் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

More News

Read more about: vande bharat indian railways
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+