Search
  • Follow NativePlanet
Share
» »சேலம் விமான நிலையத்திலிருந்து இரவு நேர விமான சேவை கிடையாது – ஏன் தெரியுமா?

சேலம் விமான நிலையத்திலிருந்து இரவு நேர விமான சேவை கிடையாது – ஏன் தெரியுமா?

ஏழை எளிய மக்களும் கூட விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டமே UDAN! இது நாட்டின் கிராமப்புறங்களை குறைந்த கட்டணத்தில் விமானம் மூலம் இணைக்கிறது. அப்படி UDAN திட்டத்தின் கீழ் இந்தியாவின் மூலை முடுக்குகளும் கூட விமான சேவையால் இணைக்கப்படுகின்றன. அதில் ஒரு சில சேவைகள் நமது தமிழ்நாட்டிலே இயக்கப்படுகிறது. அதன் கீழ் தான் சேலம் விமான நிலையமும் வருகிறது! ஆனால் இந்த விமான நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் விமானங்கள் புறப்பட அனுமதி இல்லை. ஏன் தெரியுமா? இதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ஏழை எளிய மக்களின் விமான சேவைக்காக UDAN

UDAN முழு அர்த்தம் 'உதே தேஷ் கா ஆம் நகரிக். ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமான இது நாட்டின் கிராமப்புறங்களை குறைந்த கட்டணத்தில் விமானம் மூலம் இணைக்கிறது. UDAN 4.0 குறைந்த கட்டண விமானங்களுக்கு 78 புதிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. பிராந்திய இணைப்புத் திட்டம் 200 முதல் 800 கிலோமீட்டர் வரையிலான பாதைகளுக்குப் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் நிறைய விமான நிலையங்களும் விமான சேவைகளும் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மூலை முடுக்கையும் கூட விமானம் மூல இணைப்பதே இதன் நோக்கமாகும்.

Airport

விமான நிலையத்தை விரிவுப்படுத்த கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் என்ற பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது சேலத்தில் இருந்து சென்னை பெங்களூருக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க வேண்டுமென பயணிகள் மத்தியில் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில் சேலம் விமான நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கட்டம் வாரியாக நிலம் தேவை

முதல் கட்டமாக, ஏடிஆர்-72 விமானத்திற்கான கருவி விமான விதிகளை (ஐஎஃப்ஆர்) செயல்படுத்த ஏஏஐ-யிடம் 177 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது. IFR செயல்பாடுகள் VFR ஐ விட மேம்பட்டவை மற்றும் அதிக உள்கட்டமைப்பு மற்றும் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலம் இன்னும் தமிழக அரசால் AAI-யிடம் ஒப்படைக்கப்படவில்லை. தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை, 2016ன் படி, விமான நிலைய மேம்பாட்டிற்கு நிலம் வழங்குவது அந்தந்த மாநில அரசின் பொறுப்பாகும். இந்த நிலம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து சுமைகளிலிருந்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

தமிழக அரசு முடிவுக்காக காத்திருக்கும் AAI

தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி, விமான நிலைய மேம்பாட்டிற்குத் தேவையான நிலத்தை இலவசமாகவும், தடையின்றியும் வழங்கும் சட்டப் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. ஏ-321 போன்ற பெரிய விமானங்களின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் இயக்கத்திற்கு முக்கியமான, விமான நிலையத்தில் IFR நடவடிக்கைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக முதல் கட்டத்தில் 177 ஏக்கர் நிலத்தை மாற்றுவதற்கு AAI காத்திருக்கிறது. இதனால் தான் இரவு நேரத்தில் விமானங்கள் இயக்க சேலம் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை என்று AAI கூறுகிறது.

More News

    Read more about: salem airport news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+