Search
  • Follow NativePlanet
Share
» »பேருந்து நிறுத்தத்தில் MTC பேருந்து நிற்கவில்லையா – இனி இந்த எண்களுக்கு புகார் அளியுங்கள்!

பேருந்து நிறுத்தத்தில் MTC பேருந்து நிற்கவில்லையா – இனி இந்த எண்களுக்கு புகார் அளியுங்கள்!

சென்னை வாசிகளுக்கு உயிர் நாடியாக இருப்பது சென்னை MTC பேருந்துகள், குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தவுடன் பேருந்துகளில் பெண்கள் எந்த வித சிரமுமின்றி பயணம் செய்கின்றனர். ஆனால், சில பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். இப்படி ஒரு சூழலை நீங்கள் எதிர் கொண்டால் உடனே கீழ்கண்ட எண்களுக்கு புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து துறை அறிவித்துள்ளது!

தினமும் லட்சகணக்கான மக்கள் பயணம்

சென்னை பெருநகர போக்குவரத்து கழகமான MTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். இன்றைய நிலவரப்படி MTC மொத்தம் 3,436 பேருந்துகளை தினமும் இயக்கி வருகிறது, சராசரியாக ஒரு நாளைக்கு 2.946 மில்லியன் பயணிகள் சென்னை பெருநகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

MTC bus doesn t stop on bus stop

3 இடங்களில் பிரமாண்ட பேருந்து நிலையங்கள்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சென்னை நாட்டிலேயே அதிக நெரிசல் மிகுந்த பேருந்துகளைக் கொண்டிருப்பதாகவும், நாளொன்றுக்கு ஒவ்வொரு திசையிலும் ஒரு பேருந்திற்கு 1300 பயணிகள் பயணிப்பதாகவும் அறிவித்தது. பீக் ஹவர்ஸின் போது, சில வழித்தடங்களில், 80 பேர் தங்கும் திறன் கொண்ட ஒரு பேருந்து, அமைப்பின் விரிவாக்கம் காரணமாக இரு மடங்கு மக்களை ஏற்றிச் செல்கிறது. MTC மொத்தம் 604 வழித்தடங்களைக் கொண்டுள்ளது, சென்னை பேருந்து நிலையங்கள் மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் என 3 இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பாதிப்படையும் பொதுமக்கள்

பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கால் கடுக்க காத்து கிடக்கும் போதும் கூட சில சமயங்களில் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்களும், அவசர வேலைக்காக வெளியே செல்பவர்களும், கல்லூரி மாணவர்களும் பாதிப்படைகின்றனர். இது போன்ற சமயங்களில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

புகார் அளிக்க மறக்காதீர்கள்

இதனால் அவசர சூழல்களில் பேருந்து நிற்காமல் செல்லும் போது ஆட்டோ அல்லது கேப் என்று மக்கள் வீணாக செலவு செய்ய வேண்டியுள்ளது. காசு இல்லாத மக்கள் அடுத்த பேருந்திற்காக அதிக நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. இப்படி ஒரு சூழலில் சென்னை மாநகர பேருந்துகள் நிற்காமல் செல்லும் போது புகார் எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

149 எண்களை தொடர்பு கொள்ளவும்

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

More News

Read more about: chennai mtc bus stop
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+