Search
  • Follow NativePlanet
Share
» »அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் என்ன தான் நடந்தது – மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு!

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் என்ன தான் நடந்தது – மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவு!

மிக பிரமாண்டமாக ஜனவரி 22 ஆம் தேதி திறப்பு விழா செய்யப்பட்டு உலக அளவில் பிரபலமாகியது - அயோத்தி ராமர் கோயில்! சிறப்பாக திறப்பு விழா முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கட்டுமானத்தில் என்ன நடந்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆம்! முதல் மழையை எதிர்கொண்ட ராமர் கோயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்துள்ளது. பாரம்பரிய தொழில்நுட்பம், நுணுக்கமான கட்டமைப்புகள் என சிறப்பாக கட்டுப்பட்ட ராமர் கோயிலில் அதற்குள் ஓட்டையா என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

ராமர் கோயிலின் கருவறையில் சொட்டிய தண்ணீர்

ராமர் கோயிலில் உள்ள கருவறையின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்ததாக அதன் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார். கோவில் கட்டுவதில் அலட்சியம் இருந்ததாக குற்றம் சாட்டிய ஆச்சார்ய தாஸ், சனிக்கிழமை நள்ளிரவு மழைக்குப் பிறகு கோவில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்றும், தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கோயில் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

விஐபி தரிசனத்தில் கசிந்த மழை நீர்

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த முதல் கனமழையில் கோயிலின் கருவறையின் மேற்கூரையில் இருந்து அதிக கசிவு ஏற்பட்டது. ராம் லல்லா சிலைக்கு முன் பூசாரி அமர்ந்திருக்கும் இடத்துக்கும், விஐபி தரிசனத்துக்கு மக்கள் வரும் இடத்துக்கும் நேரடியாக மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்து கொண்டிருந்தது.

noproperdrainagesystem

எப்படி ஏற்பட்டது இந்த பிழை?

நாடு முழுவதும் உள்ள சிறந்த பொறியாளர்கள் ஒன்றிணைந்து கட்டிய கோயிலில் அதற்குள் பிழை ஏற்பட்டள்ளது என்பது சற்றே ஆச்சர்யமாக உள்ளது. ராம் லல்லா சிலை நிறுவப்பட்ட அறையின் மேற்கூரை கசியத் தொடங்கியது என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கட்டுமானத்தின் போது என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம். மேலும் கோவிலில் இருந்து தண்ணீர் வெளியேற இடமில்லை என்றும் கூறப்படுகிறது.

கோயில் கட்டுமானத்தில் ஏதேனும் குளறுபடியா?

ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் கூற்றுப்படி, கோவில் வளாகத்தில் வடிகால் ஏற்பாடு இல்லை. கோவில் கட்டுவதில் ஏற்பட்ட அலட்சியம் என்று கூறியுள்ளார். மேற்கூரை கசிவு பற்றிய அறிக்கையை ஸ்ரீ ராம் மந்திர் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார். அறிக்கையின்படி கோயிலில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் கூரையை நீர்ப்புகாக்கும் வேலை செய்வார்கள்.

கோயிலில் வடிகால் அமைப்பு இல்லை

இருப்பினும், கசிவுக்கான காரணம் வடிகால் அமைப்பு இல்லாதது அல்ல என்று நிருபேந்திர மிஸ்ரா குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, குரு மண்டபம் வானத்தில் வெளிப்பட்டதால் கசிவு எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தளம் மற்றும் ஷிகர் பணிகள் முடிந்ததும், இந்த திறப்பு மூடப்பட்டுவிடும் என்று அவர் உறுதியளித்தார். நகர் கட்டட விதிகளின்படி திறந்திருக்கும் மணிமண்டபங்களில் மழைநீர் வரும் என்றும், வடிவமைப்பு, கட்டுமானப் பிரச்னை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

விரைவில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும்

மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலுக்கு வந்து மேற்கூரையை சரிசெய்து நீர் புகாதாக மாற்ற அறிவுறுத்தியதாக கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன. கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து தனித்தனியாக செய்தியாளர்களிடம் பேசிய திரு மிஸ்ரா, முதல் தளத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்கப்படும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

More News

    Read more about: ayodhya news drainage leak
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+