Search
  • Follow NativePlanet
Share
» » வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் ஆன்மீக சுற்றுலாப் பயணிகள்!

வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் ஆன்மீக சுற்றுலாப் பயணிகள்!

இந்தியாவில் இந்துக்களுக்கான பல ஆன்மீகத் தலங்களும், கோவில்களும், புராணத் தலங்களும் உள்ளன. அவற்றில் பலவற்றை வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இந்துக்களின் வாழ்நாள் ஆசையாக உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டாலும் கூட இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்களும், பாகிஸ்தானில் இந்துக்களும் வாழ்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த 190 சுற்றுலாப்பயணிகள் பஞ்சாபின் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கூறிய காரணம் ஒன்னுக்கு பின் முரணாக இருந்ததில் சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிற்கு நுழைவதற்கு தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள்.

ஆன்மீக தலைநகர் - இந்தியா

ஆன்மீக தலைநகர் - இந்தியா

இந்தியா உலக அளவில் ஆன்மீக தலைநகராக திகழ்ந்து வருகிறது. பல இந்துக்கள், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, அண்டை நாடுகளில் இருந்தும் தங்கள் வாழ்க்கையின் ஆன்மீக மற்றும் மத அம்சங்களை நிறைவேற்றுவதற்காக இந்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறார்கள். ஏனெனில் இந்தியாவில் இந்துக்களுக்கு ஏராளமான புனிதத் தலங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கோயில்கள் உள்ளன. தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டு செல்வது வழக்கமாகும்.

தேசபக்தி நிறைந்த வாகா அட்டாரி எல்லை

தேசபக்தி நிறைந்த வாகா அட்டாரி எல்லை

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் புவியியல் எல்லையான வாகா-அட்டாரி எல்லையை பார்வையிடாமல் அமிர்தசரஸ் பயணம் முழுமையடையாது. ஒவ்வொரு நாளும், எல்லையில் ஒரு சிறப்பு பீட்டிங் ரிட்ரீட் விழா நடைப்பெறுகிறது. அமிர்தசரஸில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவைக் காண வாகா எல்லைக்கு தினமும் வந்து செல்கின்றனர். வாகா எல்லையின் பீட்டிங் ரிட்ரீட் விழாவை காண கண் கோடி வேண்டும். நெஞ்சில் தேசப்பற்றை மேலோங்க வைக்கும் வாகா அட்டாரி எல்லை அமிர்தசரசில் இருந்து வெறும் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவிற்கு வருகை தந்த யாத்ரீகர்கள்

இந்தியாவிற்கு வருகை தந்த யாத்ரீகர்கள்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் உள் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பல்வேறு இந்துக் குடும்பங்கள், புனித யாத்திரைக்காக இந்தியாவில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை அன்று வாகா எல்லையை அடைந்ததாக அறிக்கைகள் கூறப்படுகிறது. வந்திருந்த 190 இந்துக்களும் இந்திய எல்லையை கடக்க முற்பட்டபோது தடை விதிக்கப்பட்டதால் அவர்களின் பயணம் திடீரென நிறுத்தப்பட்டது.

முன்னுக்குப் பின் முரணான காரணம்

முன்னுக்குப் பின் முரணான காரணம்

எனினும், அவர்கள் ஏன் இந்தியா செல்ல விரும்புகிறார்கள் என்பதற்கான சரியான காரணத்தை அவர்களால் தெரிவிக்க முடியாததால், பாகிஸ்தான் குடிவரவு அதிகாரிகள் அவர்களை விடுவிக்கவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விசாரணையின் போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்து வந்தனர். அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தற்காலிக குடிசைகளில் வசிப்பதே மிக முக்கிய காரணம் என்று அதிகாரிகள் அறிவித்தனர். ஏற்கனவே, புனித யாத்திரைக்குச் செல்வதாகக் கூறி, எல்லையைத் தாண்டி, ஆரம்பத்தில் கூறப்பட்டதை விட நீண்ட காலம் இந்தியாவில் தங்கியிருந்த நிகழ்வுகள் உள்ளன.

பாகிஸ்தானில் சிறுபான்மையான இந்துக்கள்

பாகிஸ்தானில் சிறுபான்மையான இந்துக்கள்

பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர், அங்கு அவர்கள் கலாச்சாரம், மரபுகள் மற்றும் மொழியை முஸ்லீம் குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாக புகார் கூறுகின்றனர். பாகிஸ்தானில் இந்து மக்கள் உட்பட சிறுபான்மையினர் ஏழைகள் மற்றும் நாட்டின் சட்டமன்ற அமைப்பில் மிகக் குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். ஆதலால் அவர்கள் இந்தியாவில் வந்து குடியேறுகின்றனர்.

சந்தேகித்தின் பெயரில் தடுத்து நிறுத்தம்

சந்தேகித்தின் பெயரில் தடுத்து நிறுத்தம்

அப்படிப்பட்டவர்கள், தாயகத்தில் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று வதந்திகளை பரப்புவதன் மூலம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும், இதனால் அரசியல் கொந்தளிப்பை உருவாக்குவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாகா எல்லையில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் இப்போது எல்லையை கடக்க விரும்பும் மக்களும் அதையே செய்ய நினைக்கிறார்கள் என்று சந்தேகிக்கின்றனர். எனவே, அவர்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்படவில்லை.

தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் பல பாகிஸ்தானிய குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வருவதாகவும் அந்த ஆதாரம் மேலும் கூறியது. அவர்கள் புனித யாத்திரை செல்வது போல் பாசாங்கு செய்தார்கள், ஆனால் அவர்கள் நீண்ட காலம் தங்கியுள்ளனர்.

More News

    Read more about: wagah border punjab
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+