Search
  • Follow NativePlanet
Share
» » உலகிலேயே மிக நீளமான ரிவர் க்ருஸ் ஜனவரி 13 அன்று இந்தியாவில் தொடங்கவிருக்கிறது!

உலகிலேயே மிக நீளமான ரிவர் க்ருஸ் ஜனவரி 13 அன்று இந்தியாவில் தொடங்கவிருக்கிறது!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ருகர் செல்லும் உலகின் மிக நீளமான நதிக் கப்பலை (river cruise) பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கங்கா விலாஸ் குரூஸ் என்ற பெயரில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து சுமார் 4000 கிமீ தூரம் பயணிக்கும் இந்த மிக நீளமான ரிவர் க்ருஸ் பயணத்தில் பல சுவாரஸ்ய விஷயங்கள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன? கட்டணம் எவ்வளவு? எந்த இடங்களையெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்பது போன்ற தகவல்கள் கீழே!

சுற்றுலாவை மேம்படுத்தும் ரிவர் க்ருஸ்

சுற்றுலாவை மேம்படுத்தும் ரிவர் க்ருஸ்

வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக திப்ருகர் வரை உலகின் மிக நீளமான சொகுசு நதிக் கப்பல் பயணத்தை ஜனவரி 2௦23 இல் தொடங்க இந்திய அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடந்துக் கொண்டிருந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இது நடைமுறைக்கு வரவிருக்கிறது. உலகின் மிக நீளமான சொகுசு நதிக் கப்பல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு இந்த பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 நாட்கள் சொகுசு பயணம்

50 நாட்கள் சொகுசு பயணம்

கங்கா-பாகீரதி-ஹூக்ளி, பிரம்மபுத்திரா மற்றும் மேற்கு கடற்கரை கால்வாய் உள்ளிட்ட 27 நதி அமைப்புகளில் சுமார் 4,000 கிமீ தூரத்தை 50 நாட்களில் இந்த சொகுசு கப்பல் பயணிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரணாசியில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா மற்றும் டாக்கா வழியாக அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள போகிபீலை சென்றடையும். முதல் பயணம் ஜனவரி 13 ஆம் தேதி வாரணாசியில் இருந்து தொடங்கும் என்றும், மார்ச் 4 ஆம் தேதி அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள போகிபீல் பயணத்தை அடையும் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சமீபத்தில் அறிவித்தார்.

உலகம் நம்மை திரும்பி பார்க்க போகும் தருணம்

உலகம் நம்மை திரும்பி பார்க்க போகும் தருணம்

மேற்கு வங்காளத்தில் பிற திட்டங்களைத் தொடங்கி வைக்கும் போது இதைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது உலகின் தனித்துவமான பயணமாக இருக்கும் என்றும், இந்தியாவில் கப்பல் சுற்றுலாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் என்றும் கூறினார். 50 முக்கிய சுற்றுலா தளங்கள், சில பாரம்பரிய இடங்கள், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கங்கா ஆரத்தி மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் சுந்தரவன டெல்டா போன்ற சரணாலயங்களுடன் இந்த கப்பல் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பயணத்தை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாரணாசியிலிருந்து புறப்படும் இந்தியாவின் மிக நீளமான ரிவர் க்ருஸ் பற்றிய சிறப்பம்சங்கள்

வாரணாசியிலிருந்து புறப்படும் இந்தியாவின் மிக நீளமான ரிவர் க்ருஸ் பற்றிய சிறப்பம்சங்கள்

v உலகின் மிக நீளமான சொகுசு நதி கப்பல் அல்லது கங்கா விலாஸ் கப்பல் வாரணாசியில் இருந்து திப்ருகர் வரை 50 நாட்கள் நீண்ட நதி பயணத்தில் பயணிக்கும்.

v 50 நாட்கள் நீண்ட பயணம் 27 நதி அமைப்புகளை உள்ளடக்கியது மற்றும் உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களை பார்வையிடும் பேக்கேஜையும் உள்ளடக்கியது.

v கசிரங்கா தேசிய பூங்கா மற்றும் சுந்தரவன டெல்டா உள்ளிட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் வழியாக கப்பல் செல்லுமாம்.

v கங்கா ஆரத்தி, உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகளுக்குள் பயணம், பக்சர், ராம்நகர், காஜிபூர் மற்றும் பாட்னா சுற்றுலாவும் இதில் அடங்கும்.

v உலகின் மிக நீளமான சொகுசு நதிக் கப்பலின் பயணம், இந்த பயணம் இந்தியா மற்றும் பங்களாதேஷையும் இணைக்கிறது.

v இந்த பகுதியில் நாட்டின் மகத்தான திறனைப் பயன்படுத்துவதற்கு இதுபோன்ற பல சேவைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

v உள்நாட்டு நீர்வழி அமைப்புகளின் மேம்பாடு வர்த்தகம் மற்றும் சரக்கு சேவைகளை எளிதாக்கும்.

v இது அதன் வழித்தடங்களுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுலாவை மேம்படுத்தும்.

v மத்திய அரசின் தலையீடு இல்லாமல், ஆபரேட்டர்கள் டிக்கெட் விலையை செலவு மற்றும் கூடுதல் அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

v இதில் அதிகபட்சமாக 4.37 லட்சம் ரூபாய்க்கு மேலாக விதிக்கப்படுகிறது. எனினும் மொத்த பயணத்திற்கும் எவ்வளவு கட்டணம்? மற்ற செயல் முறைகள் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் தான் தெரியவரும்.

நீங்கள் இனி வாரணாசிக்கு செல்லும் போது இந்த சொகுசு கப்பலிலும் பயணிக்கலாம் மக்களே! எப்பொழுது நீஙகள் இந்த கப்பலுக்கான டிக்கெட் புக் செய்ய போகிறீர்கள்?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X