Search
  • Follow NativePlanet
Share
» »உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை ஏறப் போகிறது – விமானப் பயணிகளே உஷார்!

உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை ஏறப் போகிறது – விமானப் பயணிகளே உஷார்!

ஆகஸ்ட் 31, 2022 முதல் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீதான விலை வரம்புகளை அகற்றுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 இல் விமான டிக்கெட்டுகளுக்கான கட்டண வரம்பு விதிக்கப்பட்டது.

இப்போது, ஏறக்குறைய 27 மாதங்களுக்குப் பிறகு விமான நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி கட்டணங்களைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பெற்று உள்ளன. இது விமான பயணிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

pricecapondomesticflightsisremoved-1662196040.jpg -Properties

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், "ஏர் டர்பைன் எரிபொருளின் தினசரி தேவை மற்றும் விலைகளை கவனமாக ஆய்வு செய்த பின்னர் விமான கட்டண உச்சவரம்பு நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு போக்குவரத்தில் வளர்ச்சிக்கு இத்துறை தயாராக உள்ளது." என ட்வீட் செய்துள்ளது.

இது வழித்தடங்கள், தேவை மற்றும் எரிபொருள் விலையைப் பொறுத்து டிக்கெட்டுகளின் விலையை மாற்றக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, விமான எரிபொருளின் விலை குறைந்தாலும், ரூபாயின் மதிப்பு சரிவது லாபத்தை ஈடுசெய்து, கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடுத்துகாட்டாக டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் இப்போது ரூ. 5,000 ஆக இருக்கிறது, ஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் டிக்கெட் விலை ரூ. 8,000 ஆக உயரும் என்று சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும், பயணிகளை ஈர்ப்பதற்காக விமான நிறுவனங்கள் இப்போது டிக்கெட்டுகளில் தள்ளுபடியை வழங்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

இதனால் விமானத்தில் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். விமான நிறுவனங்கள் தங்களுடைய சொந்தக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய அதிக சுதந்திரத்தை அனுமதிக்கும் வகையில் இந்த மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே சமயம், தொழில்நுட்ப ரீதியாக, விலை நிர்ணயம் எதுவும் இல்லாததால், விமான நிறுவனங்கள் தங்கள் சொந்த விலைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம். அதிக பயணிகளை ஈர்க்க, விமான நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது, என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆகவே வரம்பு நீக்கம் விமான டிக்கெட்டுகளில் என்ன மாற்றம் கொண்டு வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+