Search
  • Follow NativePlanet
Share
» »திரிபுராவின் புஷ்பபந்த அரண்மனை அரச வரலாற்றைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது!

திரிபுராவின் புஷ்பபந்த அரண்மனை அரச வரலாற்றைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது!

திரிபுரா தலைநகரான அகர்தலாவில் முன்னாள் மகாராஜாவால் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான புஷ்பபந்த அரண்மனை, தேசிய அளவிலான அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையமாக விரைவில மாற்றப்பட உள்ளது. தலைநகரில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த பாரம்பரிய கட்டிடம் 1917 ஆம் ஆண்டில் மகாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யாவால் கலைநயத்துடன் கட்டப்பட்டது.

1949 இல், சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டப் போது இந்த நூற்றாண்டுக் கால பாரம்பரிய கட்டிடம் இந்திய அரசின் பராமரிப்பின் கீழ் வந்தது. ஆரம்பத்தில் தலைமை ஆணையரின் பங்களாவாக இருந்தது, பின்னர் 2018 இல் ராஜ்பவனாக மாற்றப்பட்டது. இப்போது இது தேசிய அளவிலான அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையமாக மாற்றப்பட இருக்கிறது.

ujjayanta12-1

தாகூருடன் தொடர்புக் கொண்ட அரண்மனை

மகாராஜா பிரேந்திர கிஷோர் ஓவியத்திலும் அரண்மனையை ஸ்டுடியோ போன்று பராமரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் இது மாணிக்ய மன்னர்களின் பார்வையாளர் இடமாகவும் இருந்தது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர், உறவினர்களின் அரச வட்டத்துடன் உறவை முறித்துக்கொண்ட பின்னரும் ஏழு முறை திரிபுராவிற்கு விஜயம் செய்தார் என்று கூறப்படுகிறது.

1926 ஆம் ஆண்டு அரசுடனான தனது இறுதிப் பேச்சின் போது, தாகூர் புஷ்பபந்த அரண்மனையில் தங்கினார். தாகூரின் எண்பதாவது பிறந்தநாள் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யாவால் மே 1941 இல் கொண்டாடப்பட்டது.

திரிபுராவின் மாணிக்ய வம்சத்துடனான தாகூரின் உறவை விவரித்த எழுத்தாளர் பன்னா லால் ராய் "நோபல் பரிசு பெற்ற தாகூரின் ஐந்து புகழ்பெற்ற பாடல்கள் திரிபுராவில், அவர் அரச குடும்பத்தின் விருந்தினராக வருகை தந்தபோது இயற்றப்பட்டது" என்று கூறினார்.

-bangalore-palace

அருங்காட்சியகமாக மாறப்போகும் அரண்மனை

மகாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யா அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையத்தின் பாரம்பரிய கட்டமைப்பை மேம்படுத்த ரூ.40.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரணாஜித் சின்ஹா ராய் தெரிவித்தார்.

இது அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் வளமான பாரம்பரியம், தென்கிழக்கு ஆசிய நுண்கலைகள், சமகால புகைப்படங்கள், தேசிய மற்றும் சர்வதேச காப்பகங்களுடன் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

திரிபுரா சுற்றுலாத் துறையின் நிர்வாகப் பொறியாளர் உத்தம் பால் "புஷ்பபந்த அரண்மனை கட்டிடம் வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் அதன் கட்டிடக்கலை உள்ளேயும் வெளியேயும் பார்வையாளர்களால் பாராட்டப்படும் வகையில் குறைந்தபட்ச கட்டமைப்பு மாற்றங்களுடன் தக்கவைக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

tagorehouse

அரண்மனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்த அரண்மனை கட்டுமான முகப்பில் நியோ கிளாசிக்கல் விருப்பங்களுடன் வலுவான பிரிட்டிஷ் காலனித்துவ தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த அரண்மனையானது சுண்ணாம்பு சாந்தில் அமைக்கப்பட்ட செங்கல் சுமை தாங்கும் பகிர்வுகளுடன் கட்டப்பட்ட ஒரு மூன்று அடுக்கு கட்டுமானமாகும்.

இது 1,114 சதுர மீட்டர் அளவிலான பெரிய தரை தளத்தையும், 159 சதுர மீட்டர் அளவிலான சிறிய முதல் தளத்தையும் கொண்டுள்ளது.

மேலும் அருங்காட்சியகத்தில் புஷ்பபந்த அரண்மனையுடன் தாகூரின் உரையாடலுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அவரது ஓவியங்களின் பகுதிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.

நுழைவு வாயிலுக்கு அருகாமையில் உள்ள செயலக நிர்மாணமானது ஆடை அறை, சிற்றுண்டிச்சாலை, நூலகம் மற்றும் நினைவுச் சின்னக் கடையாகப் பயன்படுத்தப்பட உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X