• Follow NativePlanet
Share
» »இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய வானம் – ஆச்சர்யத்தில் வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்!

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய வானம் – ஆச்சர்யத்தில் வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்!

வானம் என்றால் எப்போதும் நமக்கு நீல நிறம் மட்டும் தான் தெரியும், ஆனால் ஆர்டிக் பகுதியில் உள்ள நாடுகளில் அப்படி கிடையாது. பச்சை, இளஞ்சிவப்பு நிற வானத்தை கூட அவர்கள் அவ்வப்பொழுது கண்டு ரசிக்கிறார்கள். ஆனால், மங்கோலியாவில் சமீபத்தில் ஒரு அரிதான வான நிகழ்வு அரங்கேறியது. அன்றைய தினத்தில் வானம் முழுவதும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்த இயற்கை நிகழ்வை காண அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். ஆனால் இதில் ஏதாவது ஆபத்து உள்ளதா?

அரோராவை காண குவியும் மக்கள்

அரோரா அல்லது நார்தர்ன் லைட்ஸ் (Northern lights) என்றழைக்கப்படும் ஒரு விதமான வெளிச்சம் வானத்தில் அரங்கேறும் ஒரு விதமான அழகிய இயற்கை நிகழ்வாகும். அரோராக்கள் முழு வானத்தையும் உள்ளடக்கிய திரைச்சீலைகள், கதிர்கள், சுழல்கள் அல்லது டைனமிக் ஃப்ளிக்கர்கள் போன்ற அற்புதமான விளக்குகளின் மாறும் வடிவங்களைக் காட்டுகின்றன. இதைக் காண பலர் மிகவும் செலவு செய்து நார்வே நாட்டுக்கு செல்லுவார்கள். இந்த வான வெளிச்சத்தை வாழ்வில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்பது பலரின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு விஷயமாகும்.

redauroraallovermongolia

மங்கோலியாவில் அரங்கேறிய அரிய நிகழ்வு

மங்கோலியா சமீபத்தில் பூமியில் அரிதான வான நிகழ்வுகளில் ஒன்றை அனுபவித்தது. அது தான் ஒரு சிவப்பு அரோரா பொரியாலிஸ். மங்கோலியாவில் அரங்கேறிய கருஞ்சிவப்பு நிற வானத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வடக்கு விளக்குகளால் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட இருண்ட இரவின் ஸ்பெல்பைண்டிங் படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர். இத்தகைய நிகழ்வு பொதுவாக துருவங்களுக்கு நெருக்கமாக நடைபெறுகிறது.

சூரிய புயலினால் ஏற்படும் அரோரா

இந்த அரிய நிகழ்வானது குறைந்த அட்சரேகைகளில் இத்தகைய புயல்களை ஆய்வு செய்யும் வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது. அரோராக்கள் தீவிர சூரிய புயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புயல்கள், சூரியன் உண்மையில் எவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் சூரிய வானிலை நம் சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நினைவூட்டுகிறது. நமது சமூகம் நாளுக்கு நாள் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு சார்ந்து வருகிறது என்பதன் மூலம் அதன் தாக்கம் பெருகும்.

சூரியனில் ஏற்பட்ட மாற்றம்

நிச்சயமாக, இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறுகளுக்கு சூரிய துகள்கள் வினைபுரிவதால் சிவப்பு அரோராக்கள் உருவாகின்றன. நவம்பர் 27 அன்று, சூரியனில் இருந்து பல கொரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் அரங்கேறின. அதன்

redauroraallovermongolia

மங்கோலியாவில் சிவப்பு வானம்

இந்த வெளியேற்றங்கள் நவம்பர் 29 அன்று பூமியை அடைந்தன. இந்த சூரிய துகள்கள் ஆக்ஸிஜனுடன் மோதியபோது, ஒரு சிவப்பு அரோரா பிறந்தது, அதைக் காணும் அதிர்ஷ்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்நாளில் ஒருமுறை காணக்கூடிய காட்சியாக அமைந்தது. உயரமான இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பது குறைவு. அதிக மோதல்கள் இல்லை என்பதே இதன் பொருள். எனவே, இது பச்சை அல்லது நீலத்திற்கு பதிலாக சிவப்பு ஒளியை வெளியிடுகிறது.

164 ஆண்டுகளுக்கு பின்னர் சிவப்பு அரோரா

சிவப்பு நிற அரோரா ஏற்படுவது வரலாற்றில் இது முதல் முறை அல்ல. இது அரிதானது, ஆனால் இந்த நிகழ்வு முன்பு நிகழ்ந்தது. 1859 ஆம் ஆண்டில், இந்த வான நிகழ்வு கரீபியன் மற்றும் மெக்சிகோவில் சிவப்பு அரோராக்கள் காணப்பட்ட மிகப்பெரிய அளவில் நடந்தது. இது நடந்தபோது, சிவப்பு சாயல் மிகவும் பிரகாசமாக இருந்தது, புவியியல் பகுதியில் உள்ள பறவைகள் கருஞ்சிவப்பு வானத்தை காலை என்று தவறாக நினைத்து பாட ஆரம்பித்தன. ஆனால் உண்மையில் இது சூரிய புயலின் தாக்கத்தினால் ஏற்படும் ஒரு வெளிச்சமாகும்.

சூரிய சுழற்சி 2024 இல் உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் ஆண்டில் இதுபோன்ற பல நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். எங்கே எல்லாம் வானம் நிறம் மாறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

More News

    Read more about: travel news mangolia
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+