Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலையில் ரூ. 3900 கோடி செலவில் சர்வதேச விமான நிலையம் – இனி சபரிமலைக்கு செல்வது ஈஸி!

சபரிமலையில் ரூ. 3900 கோடி செலவில் சர்வதேச விமான நிலையம் – இனி சபரிமலைக்கு செல்வது ஈஸி!

கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, கடுமையான விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக தேவசம் போர்டு டிக்கெட் புக்கிங், சுவாமி தரிசனம், அன்னதானம், தங்குமிடம் என பல வசதிகளை செய்து வருகிறது.

எனினும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்து அங்கிருந்து சபரிமலைக்கு செல்ல வேண்டும். இதனால் சபரிமலைக்கு அருகிலேயே ஒரு விமான நிலையத்தை அமைத்திட கேரள அரசு நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிவு செய்தது. அதற்கான ஒப்புதல் இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ள நிலையில் ரூ.3900 கோடி செலவில் பிரமாண்டமாக கிரீன்ஃபீல்ட் சபரிமலை சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவிருக்கிறது!இனி சபரிமலைக்கு நீங்கள் சுலபமாக பயணித்திடலாம்.

1

பக்தர்களுக்கு அருள் பலிக்கும் ஹரி மற்றும் ஹரனின் மைந்தன்

மகிஷியை வதம் செய்ய ஹரியும் ஹரனும் சேர்ந்து படைத்த சக்தியான சுவாமி ஐயப்பன் வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பந்தள மகாராஜாவின் மனைவி சூழ்ச்சியரிந்து காட்டிற்கு சென்ற ஐயப்பன் மகிஷியை வதம் செய்ததோடு, தன் தந்தையின் விருப்பத்தினால் சபரி மலையில் குடிகொண்டிருக்கிறார். சக்தியின் ஸ்வரூபான சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சரிய விரதத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கருணையின் வடிவமாக இருக்கும் ஐயப்பனிடம் கேட்டு கிடைக்காத விஷயம் எதுவும் இல்ல இந்த உலகத்தில். இந்த கோவிலுக்கு எந்த மதத்தினரும் வருகை தரலாம் என்பது கூடுதல் விசேஷம்.

4

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை கோவில் இந்தியாவிலேயே மிகவும் போற்றப்படும் கோவில்களில் ஒன்றாகும். பெரியாறு புலிகள் சரணாலயத்தில் சபரிமலை மலையில் அமைந்துள்ள இக்கோயில் மற்ற கோவில்களைப் போல் ஆண்டு முழுவதும் திறக்கப்படுவதில்லை. இந்து பிரம்மச்சாரி கடவுளான அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 மில்லியன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2

சபரிமலையில் விமான நிலையம்

வெளி மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து டாக்ஸி மூலமாக சபரிமலையை அடைகின்றனர். அதற்காகவே சபரிமலைக்கு அருகில் ஒரு விமான நிலையம் கட்ட வேண்டும் என்று கேரள அரசு நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. இப்போது கிரீன்ஃபீல்ட் சபரிமலை சர்வதேச விமான நிலையத்திற்கான கேரள அரசின் முன்மொழிவுக்கு நிலையான விதிமுறைகளை (TOR) வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக குழு பரிந்துரைத்துள்ளது.

எருமேலி, கோட்டயத்தில் நிலம் கையகப்படுத்துதல் துவக்கம்

முன்னதாக, கோட்டயத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி முழு மனதுடன் வரவேற்றார். ஆன்மிக சுற்றுலாவுக்கு இது ஒரு சிறந்த செய்தி என்று பிரதமர் மோடி பாராட்டினார். இந்த விமான நிலையம் அமைக்க, மணிமலை மற்றும் எருமேலி தெற்கு கிராமங்களில் இருந்து அரசுக்கு 1,039.8 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலத்திற்காக மட்டுமே ரூ.260 கோடி நிதியை ஒதுக்கியுள்ளனர்.

3

பிரமாண்டமாக தயாராகும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்

ரூ.3,400 கோடி செலவில் பிரமாண்டமாக விமான நிலையம் கட்டுவதற்கான கேரள அரசின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) விமான நிலையத்தை அமைப்பதற்கு சிறந்த தளத்தை முன்மொழிந்துள்ளது என்று அறிக்கை மேலும் கூறுகிறது. மேலும், சபரிமலை சர்வதேச விமான நிலையம் வந்தவுடன். செயல்பாட்டுக் கட்டத்தில் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களும் மேம்படும்

சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலின் பக்தர்களுக்கு சேவை செய்வதோடு இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா போன்ற கேரளாவின் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் இந்த விமான நிலையம் சுற்றுலாவை எளிதாக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்களும், பிற சுற்றுலாப் பயணிகளும் அருகிலுள்ள இடங்களுக்கும் செல்வார்கள்.

இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

    Read more about: sabarimala kerala
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+