Search
  • Follow NativePlanet
Share
» »இனி ஆன்லைன் புக்கிங்கை கேன்சல் செய்தால் அபராதம் தான்! உஷார்!

இனி ஆன்லைன் புக்கிங்கை கேன்சல் செய்தால் அபராதம் தான்! உஷார்!

பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தை நம்பியிருந்தாலும், சௌகரியம், நேரத்திற்கு செல்வது, நீண்ட நேர பயணம், இரவில் பயணிப்பது போன்ற பல காரணங்களுக்காக மக்கள் ஆன்லைன் ஆப் மூலம் ஆட்டோ மற்றும் கார்களை புக் செய்கின்றனர். இது என்னவோ நமக்கு வசதியாகத் தான் இருக்கிறது.

ஆனால் சமீபகாலமாக, ஆன்லைன் ஆப்கள் மூலம் புக் செய்யும் பலர் சில குறைகளை கூறுகின்றனர். டிரைவர் பிக் அப் பாயிண்டிற்கு வர மறுப்பது, அதில் விழும் சார்ஜ்க்கு அதிகமான தொகையை கேட்பது, எந்த காரணமும் இல்லாமல் கேன்சல் செய்வது என பல குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையறிந்த தமிழக போக்குவரத்து அமைச்சகம் ஒரு தடாலடி முடிவை எடுத்துள்ளது.

fineforautoandtaxidriveresintamilnadu

அதிகாலை அல்லது இரவு நேரத்தில் புக்கிங் செய்யும் பயணிகளிடம் அதிக சார்ஜ் கேட்பது, அதை அவர்கள் கொடுக்க மறுத்தால் புக்கிங்கை கேன்சல் செய்வது, பணம் அல்லாமல் வேறு கட்டண முறை மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்று கூறினால் புக்கிங்கை கேன்சல் செய்வது என்று சில டிரைவர்கள் நடந்து கொண்டு இருக்கின்றனர்.

அதேவேளையில், ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது டிரைவர்கள் பிக்கப் பாய்ண்டிற்கு வருவது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் அவர்கள் ஆன்லைன் ஆப்கள் அடிப்படையிலான ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக இது போன்று பல புகார்களை அளித்துள்ளனர்.

இதனை அறிந்த தமிழக போக்குவரத்து அமைச்சகம் மாநில அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 178(3)(b) இன் கீழ் அபராதம் விதித்துள்ளது. அதன்படி வண்டிகள், ஆட்டோக்கள் அல்லது பிற ஒப்பந்த வண்டிகள் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுத்தால், இவற்றுக்கு ரூ.50 முதல் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த ஸ்பாட் அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கையை பயணிகளும் வெகுவாக வரவேற்றுள்ளனர். இதனால் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வரும் பயணிகளும் சந்தோஷமடைந்துள்ளனர்.

More News

    Read more about: taxi drivers in tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+