Search
  • Follow NativePlanet
Share
» »சீசனே இல்லாத சமயத்தில் கூட குணா குகையில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகளா - மஞ்சும்மெல் பாய்ஸ் எதிரொலியா?

சீசனே இல்லாத சமயத்தில் கூட குணா குகையில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகளா - மஞ்சும்மெல் பாய்ஸ் எதிரொலியா?

இன்ஸ்டாகிராம், பேஃஸ்புக், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைத்தளத்தை திறந்தாலும் 'கண்மணி அன்போடு காதலன்' என்கிற பாடலோடு குணா குகையின் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் வலம் வருகின்றன. இதற்கு எல்லாம் காரணம் சமீபத்தில் வெளிவந்து பலரின் மனதையும் கவர்ந்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படம் தான். இந்த திரப்படம் முற்றிலும் கொடைக்கானலில் உள்ள குணா குகைகளை மையாமாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் கேரளா, தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் குணா குகையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். உண்மையில் குணா குகை அவ்வளவு ஆபத்தானதா?

மாபெரும் வெற்றி பெற்ற 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படம்

சமீபத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கி வெளிவந்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்' கேரளா மற்றும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சர்வைவல் த்ரில்லர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை செய்து வந்தது, மேலும் அதன் கடுமையான தருணங்கள் மற்றும் தனித்துவமான திரைப்படத் தயாரிப்பின் காரணமாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளை குணா குகைகள் நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.

kodaikanal

தவறி விழுந்து உயிரோடு திரும்பியவர் ஒருவர் மட்டுமே

900 அடி ஆழம், மிகவும் குறுகலான குகைகள், வழுக்கும் பாறைகள், தடுக்கி விழுந்தால் மரணம் இது தான் கொடைக்கானலின் மதிகெட்டான் சோலையில் உள்ள 'குணா குகைகளின்' அறிமுகம். இந்த குகைளில் இதுவரை எத்தனயோ பேர் விழுந்து இறந்துள்ளனர், ஆனால் இதில் விழுந்து உயிரோடு திரும்பிய 'சுபாஷ்' என்கிற கேரள நபரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தென்னிந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு குணா குகைக்கு திரும்பிய சுபாஷ்

இந்நிலையில் சமீபத்தில் உண்மையான மஞ்சும்மெல் பாய்ஸ் குணா குகைக்கு வருகை தந்திருந்தனர். சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள குடும்பத்துடன் குணா குகைக்குச் சென்றனர். அங்கே ஒன்றாக அமர்ந்து படமெடுத்து கண்மணி அன்போடு காதலன் பாடலைப் பாடி மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

kodaikanal1 toursits

அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

படத்தின் வெற்றிக்குப் பிறகு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. "இது சீசன் இல்லாத நேரம் என்றாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் மற்றும் 'குணா குகைகளுக்குச் சென்றுள்ளனர். படத்தின் வெற்றி மறைமுகமாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் உள்ளூர் மக்களின் வருவாயை அதிகரித்து வருகிறது.

வனத்துறைக்கு நெருக்கடியா?

இதற்கிடையில் குணா குகைக்கு திடீரென சுற்றுலா பயணிகளின் வருகை வனத்துறையினருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர். முரண்பாடாக இந்தப் படம் குணா குகையின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதையும் மீறி ராணிப்பேட்டையை சேர்ந்த எஸ் விஜய் (24), பி ரஞ்சித்குமார் (24), பி பரத் (24) ஆகியோர் தடை செய்யப்பட்ட குணா குகை பகுதிக்குள் சென்றனர்.

More News

    Read more about: kodaikanal guna caves
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+