Search
  • Follow NativePlanet
Share
» »ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை இந்த வழித்தடத்தில் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தம்!

ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை இந்த வழித்தடத்தில் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே 55 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்திருந்தது. ஆனால், பயணிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாவர்கள் என கருதி பகுதி நேரமாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 வரை சென்னை பீச் - பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுமாம்!

ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ரத்து

ஜூலை 23 இல் தொடங்கிய ரயில்வே பராமரிப்பு பணிகளில் புதிய பிளாட்பாரம் அமைப்பு, முக்கியமான பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் பணிகள் மற்றும் தாம்பரம் யார்டை விரிவானதாக மற்றும் முக்கிய பணிகள் ஆகஸ்ட் 18 க்குள் முடிவடையும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதனையடுத்து, சென்னை பல்லாவரம்-கூடுவாஞ்சேரி இடையே சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

255 ரயில் சேவைகளுடன் தினமும் சுமார் 5.5 லட்சம் பயணிகள் பலன்

கடற்கரை-செங்கல்பட்டு பிரிவு 255 சேவைகளுடன் தினமும் சுமார் 5.5 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த ரத்துகளின் பாதிப்பைக் குறைக்க, தெற்கு ரயில்வே சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையேயும், கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையேயும் 39 சிறப்பு ரயில்களை இயக்கி வந்தது. இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பல்லாவரம்-கூடுவாஞ்சேரி பிரிவில் 55 சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தென்னக ரயில்வே கூறியிருந்தது.

trainservicescancelledfromchennai

சென்னை கடற்கரை மற்றும் பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் 23 உள்ளூர் ரயில்கள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக, சென்னை கடற்கரை மற்றும் பல்லாவரம் இடையே 11 சிறப்பு சேவைகள் இயக்கப்படும்.

செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் ஒன்பது ரயில்கள் ரத்து

இதேபோல், இரவு 7.19 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் ஒன்பது ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் சென்னை கடற்கரை மற்றும் பல்லாவரம் இடையே ஐந்து சிறப்பு சேவைகள் மூலம் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு/தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் 16 உள்ளூர் ரயில்கள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு ஒன்பது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஒவ்வொரு திசையிலும் ஏழு சிறப்பு ரயில்கள்

மேலும், செங்கல்பட்டு/கூடுவாஞ்சேரி/தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 8.55 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும் ஏழு ரயில்கள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நான்கு சிறப்பு சேவைகள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதை ஈடுகட்ட, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே ஒவ்வொரு திசையிலும் காலை 10.45 மணி முதல் இரவு 11 மணி வரை ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

More News

Read more about: chennai tamilnadu news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+