• Follow NativePlanet
Share
» »அடிக்கடி சென்னை ஏன் புயலால் பாதிக்கப்படுகிறது – உங்கள் வீடுகளும் காணமல் போன ஏரிகளின் மீது உள்ளதா?

அடிக்கடி சென்னை ஏன் புயலால் பாதிக்கப்படுகிறது – உங்கள் வீடுகளும் காணமல் போன ஏரிகளின் மீது உள்ளதா?

வெறும் 40 லட்சம் மக்கள் மட்டுமே வாழக்கூடிய பரப்பளவு கொண்ட இடத்தில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். என்ன காரணம்? வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று 11 மாதங்களுக்கு கம்பீரமாக நின்றாலும் டிசம்பர் மாதத்தில் சென்னை அதன் மக்களை நிலைகுலைய வைக்கிறது. என்ன செய்வது? அத்தனை கடலோர மாவட்டங்கள் இருந்தாலும் ஏன் சென்னை மட்டும் அடிக்கடி புயலால் பாதிக்கப்படுகிறது? வாருங்கள் பார்ப்போம்!

சென்னையின் இரண்டாவது முகம்

இந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார மாநிலத்தின் தலைநகர், மிக நீண்ட கடற்கரை, உயர்ந்த கல்வி மற்றும் மருத்துவம், ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்கா, ஒரு சதுர கிமீ ரூ.70,000 க்கும் அதிகமாக விற்கப்படும் நிலம் கொண்ட போயஸ் கார்டன், போட் கிளப், மிகப்பெரிய மால்கள், தியேட்டர்கள் என எல்லாமும் சென்னைக்கு ஒரு முகம் இருந்தாலும், டிசம்பர் மாதம் வந்தால் வருகின்ற புயலையும் மழையையும் சென்னையால் எதிர்கொள்ள முடியவில்லையே ஏன். அப்போது ஏற்படுகிற பாதிப்பினால் சென்னையின் பெரும்பாலான மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனரே.

cyclone

கடலை ஒட்டி அமைந்துள்ள தலைநகரம்

1076 கிமீ நீளம் கொண்ட இந்த கடற்கரையானது குஜராத்தை அடுத்து நாட்டிலேயே இரண்டாவது மிக நீளமான இடத்தில் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னை, நாட்டிற்குள் வணிக நடவடிக்கைகள் மற்றும் தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க மையமாக உள்ளது. இருப்பினும் சென்னை கடலோரப் பகுதியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, வடகிழக்கு பருவமழை காலத்தில் தீவிர மழைப்பொழிவு அதிகரிக்கும் நேரத்தில், வங்கக்கடலில் உருவாகும் புயல் சென்னையை பெரும் சேதத்திற்கு உள்ளாக்குகின்றன.

அவ்வப்போது சென்னையை புரட்டிப் போடும் புயல்

வங்காள விரிகுடாவில் பல கடுமையான சூறாவளிகள் ஏற்பட்டுள்ளன, இதன் விளைவாக 1940 மற்றும் 2005 க்கு இடையில் சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், தொண்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் ரோச்செமேரி தீவு ஆகியவற்றில் சராசரியாக 1-1.5 மீ வரை பெரிய எழுச்சி ஏற்பட்டது. இதே போன்று பல இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை என புயல் சென்னையை புரட்டி போடுகிறது. வங்கக் கடலில் நவம்பர் 2015 இல் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் எற்பட்ட வெள்ளம் மற்றும் 71 பேர் உயிரே காவு வாங்கியதோடு சென்னையை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கியது. அன்று முதல் சென்னை வாசிகள் டிசம்பர் மாதம் வந்தாலே ஒரு பீதியுடன் தான் இருக்கின்றனர்.

சுருங்கிய சென்னையின் நீர்நிலைகள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலில் 3,600 ஏரிகள் இருந்தது தெரியுமா? ஆனால், இன்று அவற்றில் 3,000 மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1980களில் மொத்தம் 1,130 ஹெக்டேராக இருந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 2000-களின் தொடக்கத்தில் 645 ஹெக்டேராக சுருங்கிவிட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாம் எங்கு போயின, என்ன ஆனது என்று யோசிக்கிறீர்களா?

cyclone chennai

கட்டிடங்களாக மாறிய ஏரிகள்

பிரபல சுற்றுலாத் தலம் முதல் அரசு அலுவலகங்கள், அபார்ட்மெண்ட்கள் என சென்னையின் 600 ஏரிகள் மற்றும் குளங்கள் சூரையாடப்பட்டுவிட்டன என்று தான் கூற வேண்டும். வேளச்சேரி, பொத்தேரி, கூடுவாஞ்சேரி, முடிச்சூர், மடிப்பாக்கம், பெருங்குடி, அடையார் போன்ற பல இடங்களில் இருந்த சென்னையின் பிரதான ஏரிகள் கட்டிடங்களாக மாறியுள்ளன. ரியல் எஸ்டேட் விலை உயர்வைக் கண்டு சமீப வருடங்களில் தென்சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியவர்களும், ரயில் நிலையத்தை ஒட்டியதால் வடசென்னையில் வீடுகளுக்குள் குடியேறிய இளம் தொழில் வல்லுநர்களும் இப்போது தவிக்கின்றனர்.

வெள்ள அபாய மண்டலங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள்

1. வேளச்சேரி

2. மடிப்பாக்கம்

3. முடிச்சூர்

4. மேற்கு தாம்பரம்

5. ஊரப்பாக்கம்

6. சைதாப்பேட்டை

7. திருவொற்றியூர்

8. கோட்டூர்புரம்

9. வடபழனி

10. அடையாறு

11. பள்ளிக்கரணை

12. விருகம்பாக்கம்

13. வியாசர்பாடி

14. மாதவரம்

15. வடக்கு சென்னையின் பிரதான பகுதிகள்

இந்த வருடா வருடம் நீண்டு கொண்டே தான் போகிறதே தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை. சென்னையின் வெள்ளத்திற்கு தீர்வு தான் என்ன?

More News

    Read more about: chennai news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+