செண்ட்ரல் ஃபாரெஸ்ட் நர்சரி என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பண்ணை கேரளாவிலுள்ள நான்கு தோட்டப்பண்ணைகளில் ஒன்றாகும். இது 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தரமான மரக்கன்றுகளை வளர்க்கு நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில் தேக்கு, வேலம் மற்றும் யூகலிப்டஸ் போன்ற மரங்களின் தரமான கன்றுகள் பராமரித்து வளர்க்கப்படுகின்றன.
நீலம்பூர் பகுதியிலுள்ள தோட்டப்பகுதிகளின் ஆதாரமாக திகழும் இந்த பண்ணை கேரளா வனத்துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது. நீலம்பூர் நகரத்துக்கு அருகிலேயே உள்ள வள்ளுவசேரி எனும் இடத்தில் இந்த ‘செண்ட்ரல் ஃபாரெஸ்ட் நர்சரி’ பண்ணை அமைந்துள்ளது.
விதைக்கன்றுகள் முதல் பதியன் கன்றுகள் வரை பலவிதமான செடிவகைகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. செடிகள் தாவரங்கள் போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகள் இந்த நர்சரிக்கு விஜயம் செய்து இங்குள்ள நடைமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications