வெல்லம்தோட் எனும் இந்த வற்றாத நீர்வீழ்ச்சி தனது தனித்தன்மை வாய்ந்த வசீகரத்துக்காகவே பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு மலையின் உச்சியிலுள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கை எழிலை நன்கு பார்த்து ரசிக்கலாம்.
நீலம்பூர் நகரத்திலிருந்து 27 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி உள்ளது. கோழிக்கோட் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து அரீக்கோட் – முக்கம் சாலையின் மூலம் இந்த இடத்தை அடையலாம்.
பழங்குடி இனத்தார் வசிக்கும் குடியிருப்புகளின் நடுவே அமைந்துள்ள இந்த எழிற்பிரதேசம் இயற்கை ரசிகர்கள் மற்றும் சாகச விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமான மலைக்காட்சி ஸ்தலமாக உள்ளது.



Click it and Unblock the Notifications