தொம்மகொண்டா எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தொம்மகொண்டா கோட்டை நிஜாமாபாத் நகரத்திலிருந்து 38கி.மீ தூரத்திலும் தலைநகரமான ஹைதராபாத் நகரிலிருந்து 98 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
தனது வரலாற்றுப்பின்னணி காரணமாக நிஜாமாபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் இந்த கோட்டை மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. கம்மா பிரிவை சேர்ந்த கம்மினேணி ராஜவம்சத்தால் கட்டப்பட்ட இந்த கோட்டை 400 வருடங்கள் பழமையானதாகும். இந்த கோட்டைக்கு வெளிப்பகுதியில் காகதீய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலும் உள்ளது.
இந்த கோட்டையின் பல பகுதிகள் இடிபாடடைந்த நிலையில் தற்போது காணப்படுகின்றன. இருப்பினும் இதன் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் இன்றும் பார்த்து ரசிக்கக்கூடியவையாக உள்ளன.
நுணுக்கமான கலையம்சங்களோடு உறுதியான பாதுகாப்பு அம்சங்கள் கலந்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து கட்டிடக்கலை பாணியில் இஸ்லாமிய பாணியும் கலந்து வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் ஒப்பற்ற சிறப்பம்சமாகும்.



Click it and Unblock the Notifications