நிஜாமாபாத் நகரத்தில் வசிக்கும் முஸ்லிம் பொதுமக்களுக்கு மிக முக்கியமான ஆன்மீகத்தலமாக இந்த கென்டு மஸ்ஜித் மசூதி விளங்கிவருகிறது. இது நகர மையத்திலேயே அமைந்திருப்பதால் ஒரு முக்கியமான அடையாளத்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான முஸ்லிம் பக்தர்கள் இந்த மசூதியில் மூவேளை தொழுகை செய்வதற்காக குழுமுகின்றனர்.
பாரசீக கட்டிடக்கலை அம்சங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மசூதியின் வடிவமைப்பில் நிஜாம் வம்ச மன்னர்களின் ரசனைக்கேற்றபடி இந்தியக்கலையம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த கென்டு மஸ்ஜித் மசூதி நிஜாமாபாத் முஸ்லிம் குடிமக்களுக்காகவே நிஜாம் மன்னர்கள் கட்டியதாகும். மசூதி வளாகம் முழுவதும் இத்தாலிய பளிங்குக்கற்கள் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாது பாரசீகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள பல கலைப்பொருட்களும் இந்த மசூதியை அலங்கரிக்கின்றன.
மேலும், இதன் சுவர்ப்பகுதிகளின் புனித குர்ரான் மறை நூல் வாசகங்கள் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications