நிஜாமாபாத் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கும் இந்த ஸ்ரீ ரகுநாத கோயில் உள்ளூர் மக்களின் முக்கியமான ஆன்மீகத்திருத்தலமாக பெயர் பெற்று விளங்குகிறது. எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் வழிப்பாட்டிற்காக வருகை தருகின்றனர்.
இது விஷ்ணுவின் அவதாரமான ராமபிரானுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும். இங்கு ராமர் தனது துணைவி சீதாதேவி மற்றும் தனயன் லட்சுமணருடன் வீற்றிருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.
லட்சுமணனுக்கென்று தனி சன்னதியும் இந்த கோயிலில் உள்ளது. 14 ஆண்டு காலம் தனது மூத்த சகோதரனுடன் காட்டுக்கு சென்று அவரோடு ஒன்றி இருந்து வாழ்ந்த லட்சுமணன் சகோதர ஒற்றுமைக்கான உதாரணமாவார். ராமபிரானின் பரமபக்தனான ஆஞ்சநேயர் சிலையையும் இந்த கோயிலில் காணலாம்.



Click it and Unblock the Notifications