என்ஸா கோம்பா என்ற பெயரில் அழைக்கப்படும் என்ஸா மடாலயம் பனாமிக் கிராமத்திற்கு அருகில் உள்ள பார்வையிடமாகும். நூப்ரா பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள முதன்மையான பார்வையிடமாகவும், 250 ஆண்டுகள் பழமையானதாகவும் உள்ள என்ஸா மடாலயத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடத் தவறுவதில்லை.
ஒரு சிறிய குன்றின் அமைந்துள்ள இந்த என்ஸா மடாலயத்திற்கு வரும் பார்வையாளர்கள், அங்கிருந்தவாறே நூப்ரா பள்ளத்தாக்கில் பனியை உடுத்திக் கொண்டிருக்கும் அழகிய மலைச் சிகரங்களை காண முடியும்.
இந்த மடாலயத்திலிருக்கும் முரல் வகை சுவரோவியங்கைளயும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும். பனாமிக் கிராமத்திலிருந்து என்ஸா கோம்பாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கிட்டத்தட்ட 6 மணி நேரம் மலையேற்றம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications