நூப்ரா பள்ளத்தாக்கிலுள்ள முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றாக சிரிக்கும் புத்தர், எதிர்காலத்தின் புத்தர் என்று அழைக்கப்படும் மைத்ரேய புத்தர் உள்ளார். இவருடைய 32 அடி உயரமான சிலையொன்று இந்த பள்ளத்தாக்கில் உள்ளது.
இந்த மாபெரும் சிலை, திறந்த வெளியில், ஒரு சிறு குன்றின் மீது ஷையோக் ஆறு பாகிஸ்தான் நாட்டை நோக்கி ஓடும் திசையில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கில் வசித்து வருபவர்களின் பொருளுதவியைக் கொண்டு இந்த சிலை அமைக்கப்பட்டது.
மேலும், கான்டென் திபா அல்லது கெலுக்பாவின் தலை என்றழைக்கப்படும் மஞ்சள் தொப்பியினர் பிரிவிற்காகவும், ரிஸு மடாலயத்தின் அபாட்டிற்காகவும் 8 கிலோ அளவுடைய தங்கமும் நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 2006-ல் துவக்கப்பட்டன. கட்டி முடிக்கப்பட்ட பின்னர், ஜுலை 25, 2010-ல் இந்த சிலை திபெத்திய புத்த மதத் தலைவர் உயர்திரு தலாய்-லாமாவினால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அமைதியை முன்னிறுத்துவதற்காகவும், டிஸ்கிட் கிராமத்தை காப்பாற்றுவதற்காகவும் இந்த மைத்ரேய புத்தர் சிலை உருவாக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகளால் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications