24வது ஜைன தீர்த்தங்கரரான மஹாவீரருக்கு இந்த ஹடுண்டி ராதா மஹாபிர் கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளை ஒத்த கட்டமைப்புடன் வெண்ணிற மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த கோயில் காட்சியளிக்கிறது.
கோயிலில் ஏறுவதற்கான படிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப்படிகள் மூன்று பலகணிகளைக்கொண்ட கோயிலின் கர்ப்பக்கிருக உச்சிவரை கொண்டு செல்கின்றன.
கோயிலின் கருவறையில் பயணிகள் மஹாவீரர் சிலையை தரிசிக்கலாம். சமீபத்தில் ஆறு குப்போலா அமைப்புகளும் கோயிலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை. கலச கோபுரங்கள் போன்று வானில் நீண்டிருக்கும் அமைப்புகளாகும்.



Click it and Unblock the Notifications