தீன் தார்வாசா எனும் பெயருக்கு மூன்று கதவுகள் என்பது பொருளாகும். பன்ஹாலா கோட்டையில் உள்ள இது அடுத்தடுத்த மூன்று பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டதாக கோட்டையின் ஒரே நுழைவாயிலாகக் காணப்படுகிறது. இந்த வாசல் வழியாக நுழைந்தே ஆங்கிலேயர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர்.
தீன் தார்வாசாவுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிணறு அக்காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனும் தகவல் வியப்பூட்டும் ஒன்றாகும். அதாவது எதிரிக்கான தகவலை இணைத்து ஒரு எலுமிச்சம் பழத்தினை இக்கிணற்றினைப் போட்டால் அது அகழி வழியாக வெளியிலுள்ள எதிரியின் கையில் கிடைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
பன்ஹாலாவின் முக்கியமான வரலாற்றுச்சின்னமான இந்த தீன் தார்வாசா வரலாற்றுக்காலத்தின் உன்னதமான பாரம்பரிய பின்னணியை நமக்கு உணர்த்தும் சின்னமாக திகழ்கிறது.



Click it and Unblock the Notifications