Search
  • Follow NativePlanet
Share

படன் – சோலங்கி அரசாட்சியில் குஜராத்தின் தலைநகரம்!

25

இடைக்காலத்தில் குஜராத்தின் தலைநகரமாக விளங்கிய படன், இன்று காலஞ்சென்ற அந்த சகாப்தத்தின் அடையாளமாக நிற்கிறது. கோட்டை நகரமான படன், 8-ஆம் நூற்றாண்டில் சாளுக்ய ராஜ்புட்டின் சாவ்டா அராங்கத்தின் மன்னனான வன்ராஜ் சாவ்டாவால் கட்டப்பட்டது. வன்ராஜ் அரசரின் ஆடு மேய்க்கும் நண்பனான அனஹில் என்பவற்றின் நினைவாக இந்த நகரத்தை அன்ஹில்வாட் படன் என்றும் அழைக்கப்பட்டது.

இன்று அழிந்த நிலையில் உள்ள அரண்மனையோடு இருக்கிறது இந்த நகரம். குதுப்-உட்-டின்-அய்பக் என்ற டெல்லியை சேர்ந்த சுல்தானால் சூறையாடப்பட்டதால் தான் இது இந்த நிலையில் உள்ளது.

இஸ்லாமியர்களின் ஆளுமை இங்கு இருந்ததால் இங்கே சில இஸ்லாமிய கட்டடங்களை காணலாம். அவை அஹமதாபாத்தில் உள்ளதை விட பழமையானவை ஆகும்.

மேலும் இங்கே சாளுக்யா அல்லது சோலாங்கி காலத்தில் கட்டிய எஞ்சியுள்ள கட்டடங்களான ராணி கி வாவ், த்ரைகம் பரோட் னி வாவ், கல்காவிற்கு அருகில் இருக்கும் பழைய கோட்டை, சஹஸ்ரலிங்க சரோவர் போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிய ஈர்ப்பாக விளங்குகிறது. ஜெயின் மதத்தினரின் முக்கிய மையமாக விளங்குகிறது படன்.

அதற்கு சோலாங்கி காலத்தில் இங்கு கட்டப்பட்ட ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களே சாட்சி. தற்போது மஷ்ரு நெசவாளர்களால் சல்விவாத்தில் நெய்யப்படும் படோலா புடவைகளுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது படன்.

படன் சிறப்பு

படன் வானிலை

சிறந்த காலநிலை படன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது படன்

  • சாலை வழியாக
    காந்திநகரிலிருந்து மேஹ்சானாவிற்கு இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் உள்ளன. இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    படனுக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் மேஹ்சானாவில் உள்ளது. இங்கிருந்து படனுக்கு ஒரு மணி நேரத்தில் வந்தடையலாம். மேஹ்சானாவிலிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தான் படனுக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம். இங்கிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Jul,Mon
Return On
28 Jul,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
27 Jul,Mon
Check Out
28 Jul,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
27 Jul,Mon
Return On
28 Jul,Tue