பீஹார் ஷரீஃப், பாட்னா

பீஹார் ஷரீஃப், புத்த மதத்தைப் பற்றிய கல்விக்கான முக்கிய மையமாக விளங்கும் புராதனமான ஓடந்தாபுரி பல்கலைக்கழகத்தின் மரியாதைக்குரிய அரியணையாகத் திகழ்கிறது. இப்பகுதியின் வரலாறு முழுவதிலும் இந்த இடம் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாக விளங்கியது அப்பட்டமாகத் தெரிகிறது.

போற்றதலுக்குரிய துறவியான சயீது இப்ராஹிம் மாலிக் அவர்களின் சமாதி, பீஹார் ஷரீஃபில் தான் அமைந்துள்ளது. இந்த சமாதி பீர் பஹாரி மலையுச்சியில் காணப்படுகிறது.

இந்த அழகிய சமாதி, கடந்த 600 ஆண்டுகளாக காலம், வானிலை மற்றும் சூறையாடுதல் போன்றவற்றால் விடுக்கப்பட்ட அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வரும் வலிமை வாய்ந்த அரிய வகை செங்கற்களால் கட்டப்பட்டுள்ள ஒரு அற்புதமான கட்டிடமாகும்.  

துறவியின் சமாதியோடு சேர்த்து அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேரின் சமாதிகளும் இந்த வளாகத்தினுள் காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...