எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கலகநாதர் கோயில் விருபாக்ஷர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழையும் பயணிகள் சுகநாசா மற்றும் நவரங்க மண்டபத்தையும் ஒரு சிவலிங்கத்தை கொண்டுள்ள கருவறையையும் காணலாம்.
கருவறையை சுற்றி பிரகாரமும் அமைந்துள்ளது. குபேரர் மற்றும் கஜலட்சுமி சிலைகளை இந்த கோயிலில் பார்க்கலாம். பட்டடக்கல் ஸ்தலத்திலேயே விசேஷமான கோயிலான இது பயணிகள் தவறாமல் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.மூன்று அடுக்குகளைக்கொண்ட ஒரு பீட அமைப்பின்மீது இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றின் வெளிப்பகுதியில் சைத்யா அலங்கார வடிவமைப்புகளும் குள்ள மனிதர்களின் சிற்ப வடிப்புகளும் காணப்படுகின்றன.
சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அசுரனை வதம் செய்யும் சிற்பமும் மண்டபத்தில் காணப்படுகிறது. நெருங்கிப்பார்த்தால் எட்டுத்தலைகளுடன் காட்சியளிக்கும் இந்த கடவுள் சிலை கழுத்தில் மண்டியோட்டு மாலையுடன் தன் திரிசூலத்தால் அந்தகாசுரனை குத்திக்கொண்டிருப்பதை காணமுடியும்.
கருவறையின் வெளிச்சுவரில் உள்ள மாடங்களில் தேவகோஷ்டங்களை காணலாம். கருவறை வெளிச்சன்னதியின் வாயில் அமைப்பில் மேற்புறம் சிவனின் தாண்டவ சிற்பமும் அடிப்புறத்தில் ஆற்று கடவுள் (தேவியர்) சிற்பங்களும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications