பய்யோலி கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குஞ்சாலி மரக்கார் மியூசியம், குஞ்சாலி மரக்கார்கள் எனும் போர் வீரர்களின் குடிசையில் நிறுவப்பட்டுள்ளது.
இங்கு பழங்கால வாட்கள், பீரங்கி குண்டுகள், குத்துவாட்கள், சிறிய கத்திகள் போன்ற போராயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகம் தற்போது மாநில தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
கோழிக்கோடு மகாராஜா ஜமோரினுடைய ஆட்சி காலத்தில் இஸ்லாமிய கடற்படை அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு குஞ்சாலி மரக்கார்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக போரிட்டு இந்திய கடற்புறங்களில் முதல் கப்பற்படையை நிறுவியவர்கள் என்ற அழியாப் புகழுக்கு சொந்தமானவர்கள்.
ஆனால் இந்த குஞ்சாலி மரக்கார்கள் என்பவர்கள் கொச்சி கடல் வணிகர்கள் என்றும், கோழிக்கோடு வந்து ஜமோரினுடைய இராணுவத்தில் சேர்ந்த எகிப்தியர்கள் என்றும் பல்வேறு சர்ச்சைகள் இவர்களை பற்றி உள்ளன.
எது எப்படி இருந்தாலும் முதல் இந்திய கப்பற்படையை கட்டமைக்க காரணமாக இருந்த குஞ்சாலி மரக்கார்களின் பங்கு இந்திய கப்பற்படை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.



Click it and Unblock the Notifications