சத்ய சாய் பாபாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள எடெர்னல் ஹெரிடேஜ் மியூசியம் பாபாவின் வாழ்வு குறித்தும், அவருடைய ஆன்மீக தேடல் பற்றியும் பக்தர்கள் மற்றும் பயணிகள் அறிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களின் மினியேச்சர் வடிவங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அதோடு மத ஒருமைப்பாட்டை பற்றி எண்ணற்ற யோகிகள் அருளிய கருத்துகள் யாவும் இங்கு மாதிரிகளாகவும், ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவைதவிர இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அறை ஒன்றில் ஆன்மிக புத்தகங்கள் ஏராளம் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications