'அமைதியின் உறைவிடம்' என்ற அர்த்தத்தில் பிரஷாந்தி நிலையம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்தை தேடி உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியையும், நிம்மதியையும் நாடி வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு ஆஸ்ரமத்தின் சபா மண்டபத்தில் இருந்தவாறு சாய் பாபா தரிசனம் அளிப்பார்.
1950-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எண்ணற்ற நவீன வசதிகள் அமைந்துள்ளன. மேலும் இந்த ஆஸ்ரமம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு மற்றும் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications