சத்யபாமா கோயில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பாட்டனார் கொண்டம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 3 அடி உயர சத்ய பாமா விக்கிரகமும், பல்வேறு கிருஷ்ண பகவானின் உருவங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
சத்யபாமா கோயில் உருவானதற்கு பின் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. அதாவது கொண்டம ராஜுவின் கனவில் பரிஜத் மலர்களை பறிக்க சென்ற கிருஷ்ணருக்காக காத்திருப்பது போன்று சத்யபாமா தோன்றியுள்ளார்.
ஆனால் பூக்களை பறிக்க சென்ற தன் கணவர் கிருஷ்ண பரமாத்மா வராத ஏக்கத்தில் மனமுடைந்த போன சத்யபாமா தீராத துன்ப வேதனை அடைந்துள்ளார். அவருடைய துன்பத்தை தீர்க்க கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என்று கொண்டம ராஜுவின் கனவில் சத்யபாமா கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே கொண்டம ராஜு இந்த சத்யபாமா கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications